நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உணவு தானியங்கள் வீடுகளுக்கே சென்று விநியோகம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2018 5:08PM by PIB Chennai
பொது விநியோக முறையில் உணவு தானியங்களை நேரடியாக விநியோகிக்கும் முறையை மேற்கொள்ள தேவையான சீர்திருத்தங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் பிரிவு 12 கூறுகிறது. ஒரு மாநிலத்திற்கான மத்திய அரசின் டெப்போவில் இருந்து உணவு தானியங்களை ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் மாநில அரசு விநியோகிக்க வேண்டும் எனவும் பிரிவு 24 கூறுகிறது.
தற்போது இந்த முறை பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்ல இயலாத நுகர்வோருக்கு அவற்றை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில வாரியாக வீடுகளுக்கே சென்று உணவுதானியம் வழங்கும் முறையின் நிலை:
|
வ.எண்
|
மாநிலம்
|
வீடுகளுக்கே சென்று விநியோகம்
|
|
1.
|
தமிழ்நாடு
|
நியாய விலை கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் சுய முயற்சியில் உணவு தானியங்களை கொண்டு செல்கின்றன
|
|
36.
|
புதுச்சேரி
|
இந்த யூனியன் பிரதேசம் நேரடி மானிய மாற்றத்தின் கீழ் வருவதால் இது பொருந்தாது.
|
நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. சி.ஆர்.சவுத்ரி மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1540943)
வருகையாளர் எண்ணிக்கை : 231