வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2025-க்குள் பொருள் போக்குவரத்திற்கான முதலீடு 500 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும்: சுரேஷ் பிரபு

Posted On: 30 JUL 2018 2:35PM by PIB Chennai

பொருள் போக்குவரத்துத் துறையும் ஐ.ஐ.எப்.டி.-யும் சுரேஷ் பிரபு முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

 

அடிப்படைக் கட்டமைப்பு உட்பட பொருள் போக்குவரத்தில் முதலீட்டுக்கான செலவு 2025-க்குள் ஆண்டுதோறும் 500 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும் என்று மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இன்று (30.07.2018) புதுதில்லியில் தெரிவித்தார். இது லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும், இந்தியாவின் உள்நாட்டு மற்றும் உலக வர்த்தகத்தை சீரழிக்கும் தடைகளையும் நீக்கும் என்றும் அவர் கூறினார்.

சமீப ஆண்டுகளில் திறமையான, தீவிரமான பொருள் போக்குவரத்தின் மூலம் வர்த்தக செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆரம்ப அடிப்படை கட்டமைப்பிற்கு ஒரு முறை நிதியுதவியாக 88 லட்சமும் கட்டங்கள் வாரியாக 399.90 லட்சம் உதவி 4 ஆண்டுகளுக்கு வழங்க அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. வர்த்தக வசதிகள் மற்றும் பொருள் போக்குவரத்துக்கான மையம் இவற்றை கண்காணித்து ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளும். மேலும் அதன் மேம்பாட்டிற்கு பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கும்.

பொருள் போக்குவரத்துப் பிரிவுக்கான இலச்சினையையும் அமைச்சர் வெளியிட்டார். நீண்ட தூரம் பயணம் செய்யும் திறனுள்ள, நீர், நிலம், ஆகாயம் ஆகியவற்றில் வாழ்கின்ற, கூட்டு உழைப்பு, நல்ல ஆற்றல், பொருள் போக்குவரத்துத் தொடர்புடைய பல தரப்பினரிடையே ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடையாளம் போல் அன்னங்கள் இணை இலச்சினையாக அமைந்துள்ளது.



(Release ID: 1540732) Visitor Counter : 146


Read this release in: Hindi , Marathi , English