ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர்ப்புற கழிவு உரத் திட்டம் 2016-20 வரை தொடரும்: திரு. ராவ் இந்தர்ஜித் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2018 2:35PM by PIB Chennai

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர்ப்புற கழிவு உரத் திட்டத்தை 2019-20ம் ஆண்டு வரை தொடருவது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய திட்டமிடுதல் (தனிப்பொறுப்பு), ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு. ராவ் இந்தர்ஜித் சிங், 2019-20ம் ஆண்டு வரை ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர்ப்புற கழிவு உரத் திட்டத்தை தொடர அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறினார். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி இந்த திட்டத்தை தொடருவதற்கான மொத்த செலவான ரூ. 61,792  அல்லது நேரடி ரொக்கப் பயன் மாற்றத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் மானியம் 100 சதவீதம் உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1540005) வருகையாளர் எண்ணிக்கை : 357
இந்த வெளியீட்டை படிக்க: English