நிதி அமைச்சகம்

வாராக்கடன்களில் இருந்து கடன் தொகையை மீட்கும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 24 JUL 2018 4:00PM by PIB Chennai

வங்கிகளின் வரவு-செலவு கணக்குகளை முழுஅளவில் விதிமுறைகளுக்கு உட்பட்டு கசிவுகளற்ற வகையில் தயாரிக்க 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட வங்கிகளின் சொத்து மேலாண்மை தர ஆய்வு வாராக் கடன்கள் அதிக அளவில் இருப்பதை சுட்டிக்காட்டியது. பிரச்சினைக்குரிய கடன்கள் மூலமாக ஏற்படக் கூடிய நஷ்டம் மறுசீரமைக்கப்பட்ட கடன்களில் முன்பிருந்த இலகுவான அணுகுமுறை காரணமாக வாராக் கடன்களாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது அவை, வாராக் கடன்களாக மறுவரையற்ற செய்யப்பட்டுள்ளன.  மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் ஆகிய பிரச்சினைக்குரிய கடன்கள் அனைத்துமே வாராக் கடன்கள் பட்டியலில் வெளிப்படையான முறையில் அடையாளம் காணப்பட்டதன் விளைவாக, பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் தொகை (இந்திய ரிசர்வ் வங்கியின் சர்வதேச செயல்பாடுகளுக்கான தரவின்படி) 31.03.2015-ம் தேதியில் மதிப்பிடப்பட்ட 2,79,016 கோடி ரூபாயிலிருந்து 31.03.2018 தேதியில் 8,95,601 கோடியாக அதிகரித்துள்ளது.

வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் மற்றும் பொதுவான வாராக்கடன்களில் இருந்து கடன் தொகையை மீட்பதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக பொதுத் துறை வங்கிகள் 2015-16 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை 1,58,259 கோடி ரூபாயை மீட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகள் அளித்த தகவல்களின்படி, 31.3.2018 அன்று வரை வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது 2323 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 8835 வழக்குகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளன. நிதியியல் சொத்துக்களின் கடனீடுமயமாக்கல், மறுசீரமைத்தல் மற்றும் பத்திர உரிமை அமலாக்கல் சட்டம் 2002-ன் கீழ், கடன் தொகையை வசூலிக்க வர்த்தக அல்லது குடியிருப்பு வளாகங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் 7300 வழக்குகளில் வேண்டமென்றே கடனைச் செலுத்தாதவர்கள்மீது எடுக்கப்பட்டுள்ளன. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) வரன்முறைகள் திருத்தம் செய்யப்பட்டு, மூலதன சந்தையை அணுகி நிதி திரட்ட முடியாதபடி வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் புரோமோட்டர்கள்/இயக்குனர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் திவால் தீர்வு நடைமுறையில் பங்கேற்காதவாறு திவால் விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் நிதித் துறை இணையமைச்சர் திரு. சிவ் பிரதாப் சுக்லா இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

ரூ. 100 கோடிக்கும் கூடுதலாக வாராக்கடன் வைத்துள்ள வங்கிகளின் பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கிகளால் அளிக்கப்பட்டுள்ளது.

  கூடுதல் விவரங்களுக்கு: pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

****


(रिलीज़ आईडी: 1540001) आगंतुक पटल : 416
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English