சுற்றுலா அமைச்சகம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர, கும்பமேளா உலக அளவில் பிரபலப்படுத்தப்படும்: திரு. கே.ஜே. அல்ஃபோன்ஸ்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2018 5:46PM by PIB Chennai

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு 2019 ஜனவரியில் தொடங்கவிருக்கும் 49 நாள் கும்பமேளாவை உலக அளவில் பிரபலப்படுத்துவதற்கு மத்திய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.

  • நாடுமுழுவதும் “செல்வோம் கும்பமேளாவுக்கு செல்வோம்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்குதல்
  • 2019 கும்பமேளாவிற்காக தனி அடையாளம் மற்றும் சந்தைக்கானப் பிரச்சாரம் செய்தல்
  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு நாட்டில் உள்ள மிகப் பெரிய சர்வதேச விமான நிலையங்களில் விளம்பரங்கள் செய்தல்
  • கும்பமேளாவிற்கு வருகை தரும் 192 நாடுகளுக்கான கொடியேற்றும் பகுதியை ஒதுக்கி மேம்படுத்துதல்
  • வாரணாசியில் 2019-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர் தினத்திற்கு வருகை தரும் வெளிநாடு வாழ் இந்தியப் பிரதிநிதிகளை கும்பமேளாவிற்கு வரவழைத்தல்

இந்தத் தகவலை மக்களவையில் இன்று (23.07.18) மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. கே.ஜே. அல்ஃபோன்ஸ் தெரிவித்தார்.

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1539757) வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க: English