தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமை

प्रविष्टि तिथि: 23 JUL 2018 3:54PM by PIB Chennai

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கும் அரசு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது.  இதற்காக தனியார் துறை பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா  ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தீன் தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற கணிசமான அளவு முதலீடு உள்ள பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்த, சுமார் 22 அமைச்சகங்கள் / துறைகள் பல்வேறு பிரிவுகளில் திறன் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகின்றன.  சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முத்ரா மற்றும் ஸ்டார்ட் அப்  திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.

தேசிய வேலைவாய்ப்பு சேவை திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குவோர் பற்றிய விவரங்கள் தேசிய அளவிலான இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, திறமையான மற்றும் பொறுப்பான முறையில் வேலைவாய்ப்பு தொடர்பான  பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

வேலைவாய்ப்பு உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன் 2016-17 ஆம் ஆண்டில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின்கீழ், அனைத்துத் துறைகளிலும்  புதிதாக வேலையில் சேரும் தொழிலாளர்களுக்கு, முதலாளி செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்கான மொத்த சந்தா தொகையையும் மூன்று ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும்.  

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. சந்தோஷ்குமார் கங்வார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

                                                    ••••••


(रिलीज़ आईडी: 1539743) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English