ரெயில்வே அமைச்சகம்

புதிய ரெயில் பாதைகள் தொடக்கம்

Posted On: 20 JUL 2018 4:38PM by PIB Chennai

2009-2014 காலத்தின் போது புதிய ரெயில் பாதைகள், அகல ரெயில் பாதையாக மாற்றியமைத்தல், இரட்டை வழி ரெயில் பாதை அமைத்தல் ஆகிய பணிகளின் சராசரி முன்னேற்றம் நாளொன்றுக்கு 4.1 கிலோ மீட்டராக இருந்தது. 2014-2018 காலத்தின் போது புதிய ரெயில் பாதைகள் அகல ரெயில் பாதையாக மாற்றியமைத்தல், இரட்டை வழி ரெயில் பாதை அமைத்தல் நாளொன்றுக்கு 6.53 கிலோ மீட்டர் வீதம் அமைக்கப்பட்டு மொத்தம் 9,528 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்டது.

ரெயில்வே திட்டங்கள் நிறைவு பெறுவதற்கு மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள் ஆகியவற்றின் நில ஆர்ஜிதம், மற்றும் வனத்துறை, வன விலங்குகள் துறை போன்ற சட்டப்படியான அனுமதிகள் ஆகியவை தேவைப்படுகின்றன. இதன் காரணமாக திட்டம் நிறைவு பெறுவது தாமதப்படுகிறது.

ரெயில்வே திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவு பெறுவதற்கு ரெயில்வே முறையான கூட்டங்களை மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் ஆகியவற்றுடன் நடத்தி பாதை அமைப்பு வழி, நில ஆர்ஜிதம், வனத்துறை மற்றும் வன விலங்குகள் துறை ஒப்புதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இந்தத் தகவலை ரெயில்வே இணையமைச்சர் திரு. ராஜன் கோஹைன் மாநிலங்களவையில் இன்று (20.07.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.



(Release ID: 1539530) Visitor Counter : 145


Read this release in: English , Bengali