ரெயில்வே அமைச்சகம்
ரெயில்வேக்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் இருக்கை உறுதியாகும் சாத்தியக்கூறுகளை கணிப்பதற்கான கருவி
Posted On:
20 JUL 2018 4:47PM by PIB Chennai
ரெயில்வேக்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் இருக்கை உறுதியாகும் சாத்தியக்கூறுகளை கணிப்பதற்கான கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு டிக்கெட் பதிவு செய்யும் போதும், பி.என்.ஆர். விசாரணையின் போதும் செய்து தெரிவிக்கப்படும். எந்திர கற்றல் வழிமுறையை பயன்படுத்தி இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பி.என்.ஆர். தகவல்கள் அடிப்படையில் கணிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையின்படி பல்வேறு காத்திருப்போர் பட்டியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப போக்குகள் உறுதிச் செய்யப்பட்டு எதிர்கால பயணத் தேதிகளுக்கு இருக்கை உறுதியாகும் கணிப்புகள் செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு-
- பொதுப் பிரிவு காத்திருப்போர் பட்டியலின் சாத்தியக் கூறுகளை இது கணிக்கிறது.
- விடுமுறை கால நெரிசல் சூழ்நிலையில் அதிகபட்சமாக உள்ள காத்திருப்போர் பட்டியலையும் கருத்தில் கொள்கிறது இந்தக் கருவி.
- சென்ற ஆண்டு இதே பயணத்தின் போது காத்திருப்போர் பட்டியலிலிருந்து இறுதி செய்யப்பட்ட கடைசி டிக்கெட்டின் போக்கை இந்தக் கருவி காட்டுகிறது.
- நடப்பு நிலவரத்தின் அடிப்படையில் மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் கணிக்கப்படுகின்றன.
இப்போதைக்கு இந்த வசதி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக வலைத்தளத்தில் மட்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் இந்த அம்சம் 2018 ஜூன் 13-ந் தேதி முதல் கீழ்கண்ட வகையில் செயல்பட தொடங்கியுள்ளது.
- பயன்படுத்துவோர் டிக்கெட் பதிவு செய்யும் போது அவரது பெயர் காத்திருப்போர் பட்டியலில் சேரும் நிலையில் அவருக்கு இருக்கை உறுதிச் செய்யப்படும் சாத்தியக் கூறை அவர் இந்த வலைத்தளத்திலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
- அதே போல பி.என்.ஆர். விசாரணை மேற்கொள்ளும் காத்திருப்போர் பட்டியல் பயணி அந்த சமயத்திலும் கூட இருக்கை உறுதிச் செய்யப்படும் சாத்தியக்கூறை தெரிந்துக் கொள்ளலாம்.
ரெயில்வே துறை இணையமைச்சர் திரு. ராஜன் கோஹைன் மாநிலங்களவையின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
(Release ID: 1539518)