வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

8-வது இந்தியா – ஓமன் கூட்டுக்குழுக் கூட்டம் மஸ்கட்டில் தொடங்கியது

Posted On: 16 JUL 2018 5:43PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் தொழில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு சுரேஷ் பிரபு ரோமன் நாட்டின் தொழில், முதலீடு, வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அலி பின் மசூத் அல் சுனைடியுடன் கூட்டாக இன்று (16.07.2018) மஸ்கட்டில் 8-வது இந்தியா – ஓமன் கூட்டுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் பேசிய திரு சுரேஷ் பிரபு, இந்தியாவில் முதலீடு செய்து தங்களது வெற்றியை வளர்த்துக் கொள்ளுமாறு ரோமன் நாட்டு நிறுவனங்களை கேட்டுக் கொண்டார். இந்தியாவில் லட்சம் கோடி டாலர் வாய்ப்புகளைக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” போன்ற முதலீட்டுக்கு உகந்த பல திட்டங்களை இந்திய அரசு தொடங்கியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.

      குழுக் கூட்டத்தில் விண்வெளி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, தொடக்கநிலை நிறுவனங்கள், சிறு-நடுத்தர தொழில்கள், உணவுப் பாதுகாப்பு, சேவைகள் துறை, சுற்றுலா, கருத்துப்பரிமாற்றம், இளம் தொழில் முனைவோர் பயணம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தியா – ஒமன் இருதரப்பு வர்த்தகம் 2014-15-ல் சுமார் 413 கோடி அமெரிக்க டாலர் அளவிலிருந்து 2017-18-ல் 670 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்றும் ஓமனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி இதே காலத்தில் 238 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 243 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்றும் திரு சுரேஷ் பிரபு தெரிவித்தார். பெரும் எண்ணிக்கையிலான பலதரப்பட்ட, பெரிதும் மதிக்கப்படும் புலம் பெயர்ந்த வந்த இந்திய சமுதாயத்தினர் ஓமன் நாட்டின் அனைத்துத் தொழில் துறைகளிலும் உள்ளனர் என்றும் அவர்கள் கடும் உழைப்புக்கும் அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.  

   மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-----



(Release ID: 1538837) Visitor Counter : 129


Read this release in: English