குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நான்கு உறுப்பினர்களை நியமித்தார்

प्रविष्टि तिथि: 14 JUL 2018 12:31PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு -80 அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமரின் பரிந்துரையின்  பேரில், குடியரசுத் தலைவர்  மாநிலங்களவைக்கு கீழ்கண்ட நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளார். 

திரு ராம் ஷக்கால்:  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் பிரபலமான மக்கள் தலைவர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதி ஆவார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் தலித் சமுதாயத்தினரின் நலன்களுக்காக பாடுபட்டு வருபவர்.

திரு ராகேஷ் சின்ஹா:  பிரபலமான எழுத்தாளரான இவர்  தில்லியை தலையிடமாகக் கொண்ட “இந்தியா கொள்கை அமைப்பின்” கவுரவ இயக்குநர் ஆவார். மோதிலால் நேரு கல்லூரி பேராசிரியராகவும், ஐ சி எஸ் ஆர் ஆர் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

திரு ரகுநாத் மொஹாபத்ரா:  கற்சிலை வடிவமைப்பில் இவர் உலகப் புகழ் பெற்ற நிபுணராவார். 1959 முதல் இரண்டாயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.  பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகள் பாதுகாப்பில் பணியாற்றியுள்ளார்.

திருமதி சோனால் மான்சிங்: நாட்டின் முன்னணி சாஸ்திரீய நாட்டிய கலைஞர்களில் இவரும் ஒருவர். 60 ஆண்டுகளாக பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.  இந்திய சாஸ்திரீய நாட்டிய பள்ளியின் நிறுவனர் இவர் ஆவார்.


(रिलीज़ आईडी: 1538782) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English