குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மகளிருக்கு அதிகாரமளித்தல் தேசிய இலக்கு மட்டுமன்றி உலக அலுவல்பட்டியலும்தான்: சொத்து மற்றும் நில உரிமைகள் மகளிர் அதிகாரமளித்தலுக்கு அடிப்படையானவை: குடியரசுத்துணைத்தலைவர்.
Posted On:
16 JUL 2018 2:36PM by PIB Chennai
அனைத்தையும் உள்ளடக்கிய சமமான, நிலைத்த மேம்பாட்டு நோக்கத்தை அடைய மகளிருக்கு அதிகாரம் அளிப்பது முக்கியமானது என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (16.07.2018) நிதி ஆயோக்கும், ஸ்ரீராம் வர்த்தக கல்லூரி யும் ஏற்பாடு செய்திருந்த “மகளிருக்கு அதிகாரமளித்தல்: தொழில் முனைவுத்திறன், புதுமைப் படைப்பு நிலைத்த தன்மை” என்பது பற்றிய சர்வதேச மாநாட்டை அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.
சரியான வாய்ப்புகளும், உரிய சுற்றுச்சூழலும் இருந்தால் பெண்கள் வாழ்க்கையின் எந்தத் துறையிலும் சிறந்து விளங்குவார்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். சமுதாயத்தில், பொருளாதார, அரசியல், பொது வாழ்க்கையில் தடையற்ற, முழுமையான, தீவிர பங்கேற்பு அளிக்கும் வகையில், மகளிரை ஊக்குவித்து தகுந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சினிமா போன்ற மக்கள் ஊடகங்கள், மகளிருக்கு அதிகார அளிப்பதிலும், முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பெண்களுக்கு சொத்தும் மற்றும் நில உரிமைகளில் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
கல்வி, வேலை வாய்ப்புகளில், வாய்ப்புக் குறைவு, தொழிலாளர் சந்தையின் சமச்சீர் இன்மை, வளர்ந்து வரும் பாலியல் வன்முறைகள், வீட்டு பணிச்சுமை ஆகியன பெண்கள் மேம்பாட்டுக்கு தடைகளாக உள்ளன என குடியரசுத்துணைத் தலைவர் கூறினார். நமது மன நிலைகளில், பெரிய மாற்றம் ஏற்பட்டு மகளிர் மற்றும் சமுதாயத்தில் அவர்களின் பங்கு குறித்த மனப்பான்மை உருவானால்தான் பாலின வேறுபாடு மறையும் என்றார்.
பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத்துணைத்தலைவர், பெண்கள் கல்வி நிலை உயர்வடைவது, குழந்தைகள், மரண வீதம் குறைவது, குடும்ப ஆரோக்கிய மேம்பாடு, ஆகியவற்றில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
குடியரசு துணைத்தலைவரின் முழு உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
------
(Release ID: 1538769)
Visitor Counter : 393