சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

“ஆயுஷ்மான் பாரத் நலத் திட்ட உதவி பெற ஆதார் தேவை, கட்டாயமல்ல”

प्रविष्टि तिथि: 12 JUL 2018 2:07PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் – தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (Ayushman Bharat – National Health Protection Mission) கீழ் நல உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று சில பத்திரிகைகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆயுஷ்மான் பாரத் – தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் குறித்து வெளியிட்ட அறிவிக்கையில் ஆதார் சட்டம் 7ஆவது பிரிவின் கீழ் நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு பயனாளியின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அட்டையைக் கேட்க வேண்டும் என்றுதான் அத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பயனாளியின் அடையாளத்தைச் சரியாக உறுதி செய்வதற்காக ஆதார் அட்டையை வைத்திருப்பதே சிறந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயமாக ஆதார்தான் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆதார் எண் இல்லாத பட்சத்தில் பலன்கள் கிடைக்காது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

 

“இத்திட்டத்தின் பலன்கள் ஆதார் அட்டை இருந்தாலும் இல்லையென்றாலும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

 

இது தொடர்பான வரைவு அறிவிக்கையில், பயனாளியிடம் ஆதார் அட்டை இல்லாத நிலையில், ஆதாருக்கு மாற்றாக ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) குறித்த அட்டை ஆகிய ஏதாவது ஒன்றைக் காட்டலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அது மட்டுமின்றி, ஆதார் எண் இல்லாத பயனாளிகளுக்கு உதவும் வகையில் ஆதார் எண் வழங்கும் மையங்களை அமைக்க வேண்டும் என்று அமல்படுத்தும் முகமைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

ஆயுஷ்மான் பாரத் – தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல்கள் (ABNHPM guidelines) பயனாளிகள் தங்களது அடையாளத்தைக் காண்பதற்காக ஆதார் அட்டையோ, ஆதார் இல்லாத போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது அடையாள அட்டையையோ காட்டலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களை அறிய இணையதளம்:

 

https://www.abnhpm.gov.in/sites/default/files/201806/GuidelinesonProcessofBeneficiaryIdentification_0.pdf

 

 

***


(रिलीज़ आईडी: 1538463) आगंतुक पटल : 300
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi