பிரதமர் அலுவலகம்

டிஜிட்டல் நீதிமன்றத்தை நோக்கிய உச்சநீதிமன்றத்தின் பயணத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 10 MAY 2017 7:49PM by PIB Chennai

இந்த அரங்கத்தில் கூடியிருக்கும் மரியாதைக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சகோதர-சகோதரிகள் மற்றும் நண்பர்களே.

இன்று புத்த பூர்ணிமாபுத்த பூர்ணிமாவையொட்டி உங்கள் அனைவருக்கும் நாட்டு மக்களுக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள்இந்தியா மாறிவருகிறதுஇன்று விடுமுறை நாள்; நாம் பணி செய்து கொண்டிருக்கிறோம்மே மாதம் 10 ஆம் தேதி மற்றொரு காரணத்திற்காக முக்கியமானதாகும்; 1857 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியாவின் விடுதலைப் போர் தொடங்கியது

இந்நாளில் நவீன இந்தியாவை நோக்கிய மற்றொரு படியாக, அதுவும் நாட்டின் நீதித்துறை அமைப்பில் இன்று தொடங்குகிறதுஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுதல்களையும் மரியாதையையும் உரித்தாக்குகிறேன்அலகாபாதில் சென்ற முறை சந்தித்த போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாட்டின் நீதித்துறை அமைப்பின்  தற்போதைய நிலை பற்றி விரிவாக எடுத்துரைத்ததோடு நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும் தெரிவித்தார்நீதிமன்ற விடுமுறை காலத்தின் போது வழக்குகளை விசாரிக்க நேரம் ஒதுக்குமாறு அவர் நீதித்துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்இந்த வேண்டுகோளை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்பதோடு அது உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது.   உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது விடுமுறையை குறைத்துக் கொண்டு நாட்டின் ஏழை மக்களுக்காக நேரம் ஒதுக்க இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சித் தரக்கூடியதுஅதற்கு நான் அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்பணியின் அளவில் இது எது மாதிரியான  பலனை தரும் என்பது ஒருபுறம் இருக்க, இதுபோன்றதொரு கடப்பாடு ஒட்டுமொத்த சூழலில் மாற்றங்களை உண்டாக்குகிறதுஇது பொறுப்புணர்வை வலியுறுத்துவதோடு சாமானியரிடம் நம்பிக்கையை உண்டாக்குகிறதுஇந்த புதிய நம்பிக்கை நவீன இந்தியாவுக்கு மிகவும்  அவசியம்இதற்காக நான் என்னுடைய மனமார்ந்த மரியாதையை உங்களுக்கு உரிதாக்குகிறேன்

நான் மாநிலத்திலும், மத்தியிலும் பணியாற்றி இருக்கிறேன்எனினும், துரதிருஷ்டவசமாக அரசுகள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளின் தொழில் நுட்பம் ஓரளவுக்குத்தான் புரிந்து கொள்ளப்பட்டதுநம்மை பொறுத்த வரை தொழில்நுட்பம் என்பது வன்பொருள்அதை பெறும் முறை மற்றும் அதனை பொருத்தும்  முறை ஆகியவையே தொழில்நுட்பமாக இருந்தது. முந்தைய காலத்தில் நாம் ஒரு அலுவலகத்திற்கு சென்றால், உயரதிகாரிகளின் வருகைக்காக அங்குள்ள மேசைகளின் மீது வைக்கப்பட்ட பூந்தொட்டியில்  மலர்கள் வைக்கப்பட்டிருக்கும்அப்போது பூந்தொட்டி வழக்கமான அம்சமாக இருந்தது. இளநிலை அதிகாரிகள் வரும் போது சிறிய பூந்தொட்டி வைக்கப்பட்டிருக்கும்காலம் மாறிவிட்டதுஇன்று கணினி பூந்தொட்டியின் இடத்தை பிடித்திருக்கிறதுஅதனை இயக்கவில்லை என்றாலும், பயன்படுத்தவில்லை என்றாலும் நன்றாகவே இருக்கிறதுஎனவே, இது தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட்டின் பிரச்சினையல்ல, மனநிலையின் பிரச்சினையாகும்இன்று புத்தபூர்ணிமாவையொட்டி புத்த பெருமானோடு சம்பந்தப்பட்ட ஊக்கம் தரும் ஒரு கதை.  மாற்றம் என்பது, ஒருவர் மனதை மாற்றும் போது, தனது கருத்தை மாற்றும் போது மற்றும் உலகம் பற்றிய தனது பார்வையை மாற்றும் போதுதான் தொடங்குகிறது என்றார் புத்தர்இது புத்தபெருமானின் ஊக்கம் தரும் செய்தியாகும்இதை இன்றும் நாம் அனுபவமாக கண்டு வருகிறோம்ஒரு கைப்பேசியை வாங்கிய ஆறு மாதத்திற்குள் புதிய கைப்பேசியை நாடுகிறோம், அதனை வாங்க திட்டமிடுகிறோம்ஆனால், புதிய மாடல் தன்னிடம் உள்ள போதிலும் தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடு ஒன்று பாக்கெட்டில் இருக்கும்கைப்பேசிகளில்  தொலைபேசி எண்களை வைத்திருக்கும் வசதி இருந்த போதிலும், மக்கள் கையேடுகளை வைத்திருக்கிறார்கள்கைப்பேசியின் பச்சை மற்றும் சிவப்பு  பொத்தான்களின் இரண்டு செயல்பாடுகளுக்கு மேலாக தமக்கு தெரியாது என்றாலும், நண்பர்களின் அழுத்தத்தின் காரணமாக நல்ல கைப்பேசிகளை கையில் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்பழைய பழக்கங்களை மாற்றுவது கடினம்சில நேரங்களில் குறுந்தகவல் அனுப்பிய பிறகும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து குறுந்தகவல் வந்ததா, இல்லையா என்று தெரிந்து கொள்கிறோம்மென்பொருள் ஒரு சவால் அல்ல வன்பொருளும் ஒரு சவால் அல்ல, நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒட்டுமொத்தமாக மாற வேண்டும். ஏனென்றால் ஒரு கண்ணி அறுந்து போனாலும், முழு செயல்பாடும் ஸ்தம்பித்துப் போகும்சிலர் இப்படி நினைக்கலாம், நம்மில் பலர், நான் உட்பட கையில் அச்சிடப்பட்ட செய்தித்தாள் இல்லாமல் செய்திகளை ரசிப்பதில்லைஇன்றைய தலைமுறைக்கு அச்சிடப்பட்ட செய்தித் தாள்கள் எளிதாக கிடைக்கின்றன என்றாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எனினும் உலகச் செய்திகள் பற்றி முழுவதுமாக அறிந்திருக்கின்றனர். இந்த மாற்றங்களோடு மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு சுமூகமான சூழலை உருவாக்கினால் மட்டுமே இவற்றை செய்ய முடியும்ஒரு தனிநபர் இதனை  தனது தனிப்பட்ட நலனுக்காக செய்தால் அவர் இந்த ஒட்டுமொத்த சூழலில் தனிமைப்படுத்தப்படுவார்.

இதனால்தான், தங்கள் பயிற்சிப் பற்றி அவ்வப்போது விவாதித்து வருவதாகவும் அப்போதுதான் அது அனைத்து நிலைகளுக்கும் சென்றடையும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்னிடம் கூறினார்தொழில்நுட்பத்தின் வலிமை அலாதியானதுஇதன் அனுபவம் யாருக்கு ஏற்பட்டாலும், அதனை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவருக்கு தெரியும்முந்தைய நாட்களில் மக்கள் தொழில்நுட்பத்தை கண்டு அஞ்சினர்.   இதனை நீங்கள் அனுபவத்தில் கண்டு இருப்பீர்கள்நீங்கள் ஒரு புதிய வி.சி.ஆரையோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியையோ வாங்கி அதன் செயல்பாட்டில் தடை ஏற்பட்டால் உங்களது பேரனின் உதவியை நாடியிருப்பீர்கள்அவர் அதற்கு ஒரு தீர்வு காண்பார்எனவே இந்த பிரச்சினையில் ஒரு பெரிய தலைமுறை இடைவெளி உள்ளது

இதனால் தான் இந்த மாற்றங்களை எதிர்கொள்வது ஒரு தலைமுறையினருக்கு கடினமாக உள்ளதுஎனினும் இதோடு அந்த தலைமுறை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றால், தொழில்நுட்பம் அனைத்து நிலைகளையும் சென்று அடைவது இயலாதது ஆகிவிடும்இதுவே இந்த பிரச்சினையில் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்புடைய எளிமையான, பயனுள்ள, சிக்கனமான, சுற்றுச்சூழலோடு ஒத்திசைந்த மின்னணு நிர்வாகத்தை எப்படி ஏற்றுக் கொண்டு அதனுடன் இயைந்து செல்வது? எத்தனை காடுகளை நான் அழிவிலிருந்து காப்பாற்றுவேன், எவ்வளவு மின்சாரத்தை நான் சேமிப்பேன், அப்படி மின்சாரத்தை சேமிப்பதால் பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு நான் தீர்வு கண்டவனாவேன்,   இதுதான் இயல்பிலேயே அமைந்த இயற்கை அமைப்பின் சக்தி,   இது பற்றிய முழுமையான புரிதல் இல்லாவிட்டால் நான் தொழில்நுட்பத்தை புறக்கணிக்கிறோம்இது நமக்கானதல்ல என்று விலகி விடுகிறோம்யாரோ ஒரு குறிப்பிட்ட நபர் செய்வது மட்டுமே நவீனமானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லைஅதேபோல பழசெல்லாம் பாழ் என்றும் கொள்ள வேண்டியதில்லைகால அவகாசம் குறைவாக இருக்கும் போது தொழில்நுட்பம் கைகொடுக்கும்ஏன் என்றால் அது எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவுஇது அவ்வளவு எளிதானது, பயன் தரக்கூடியது.

அரசைப் பொருத்தவரை   நாம் அல்லது நமது துறைகள்  எதைச் செய்தாலும் அது சிறப்பாகவே இருக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. நாம் தவறு செய்வதில்லை, நம்மிடம் குறைபாடுகள் எதுவும் இல்லை என்ற பொதுவான கருத்தும் உள்ளதுதங்கள் பணி சார்ந்த விஷயங்களைப் பொருத்தவரை மக்கள் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பது இயற்கையானதே. இரண்டு மாதங்களுக்கு முன் அனைத்துத் துறைகளிடமிருந்தும் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், துறைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டிய தவறான அம்சங்கள், அல்லது எளிதாக்கப்பட வேண்டிய நடைமுறைகளின் அவசியம், ஆகியவை குறித்து எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன்சில தினங்களுக்கு அவை அனைத்தும் பிரச்சினைகள் இருப்பதை மறுத்து வந்தன, எல்லாம் சரியாகவே உள்ளது என்று அவை தெரிவித்தன.

  எனினும், நான் இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், மேம்பாடு தேவைப்பட்ட அல்லது சில இடையீடுகள் தேவைப்பட்ட சுமார் 400 பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் இந்த பிரச்சினைகளை பல்கலைக்கழகங்களிடம், குறிப்பாக 18 முதல் 22 வயது வரையிலான இளைஞர்களிடம்  கொடுத்தேன். அவர்களிடம் இடைவெளியில்லாத 36 மணி நேர ஹேக்கத்தான் போட்டியாக இது கொடுக்கப்பட்டது. இந்த 400 ஆளுமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 42,000 மாணவர்கள் இந்த ஹேக்கத்தான் போட்டியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் 36 மணி நேரம் இடைவெளியின்றி அமர்ந்து போட்டியில் ஈடுபட்டனர். இவர்கள் பல பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து நடைமுறைகளுக்கு தீர்வுகளை வழங்கியது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பின்னர் இவர்கள் அரசுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது இந்த பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்று தெரிவித்தனர்பல்வேறு துறைகள் அவர்களது தீர்வுகளை ஏற்று செயல்படுத்தின. இது கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். அதாவது நாம் முயற்சி எடுத்தால் மிக அதிகமான சாத்தியக்கூறுகள் நமக்குக் கிடைக்கும்.   தொழில்நுட்பத் துறை சார்ந்த மாணவர்களிடம் கேள்விகளை கேளுங்கள், அவர்களிடம் இத்தகைய பிரச்சினைகளை கொடுங்கள், அவற்றுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்ளுங்கள், இதற்கென மென்பொருள் ஏதாவது உருவாக்க முடியுமா எனக் கேளுங்கள், எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் கேளுங்கள். அப்போது அவர்கள் எளிதாக ஏற்கக் கூடிய எளிதாக இணைத்துக்கொள்ளக் கூடிய மிகச் சிறந்த தீர்வுகளை அளிப்பார்கள் என்று உறுதியுடன் என்னால் சொல்ல முடியும்நான்  ஐ.டி. + ஐ டி என்பதில் நம்பிக்கைக் கொண்டவன். இதற்கு கணிதப்பாடத்தில் நிபுணத்துவம் கொண்ட  வான் விளக்கம் தேவையில்லை. நான் ஐ டி + ஐ டி என்று சொல்லும்போது அதனை நம்பிக்கையுடன் சொல்கிறேன். ஐ டி + ஐ டி என்றால் தகவல் தொழில்நுட்பம் (Information Technology) + இந்திய திறன்கள் (Indian Talent) = நாளைய இந்தியா (India tomorrow). இதுதான் ஐ டி + ஐ டி-யின் வலுஇந்த ஆற்றலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நமது மேம்பாடு அமைந்துள்ளது.

    இந்த நாட்களில், குறிப்பாக நவம்பர் எட்டாம் தேதிக்கு பிறகு, டிஜிட்டல் நாணயம் போன்ற  எனக்கு முன் பின் தெரியாத துறைகளில்  அதிக ஆர்வம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தேதியாகும். நோட்டுக்களை அச்சடித்தல், அவற்றின் பாதுகாப்பு, அவற்றைக்கொண்டு செல்லுதல் ஆகியன பல  100 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் விஷயங்கள் என்பதை நான் அறிவேன். சில சமயம் ஒரு ஏ.டி.எம்-ஐ பாதுகாக்க 6 போலீஸ்காரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இதெல்லாம் தொழில்நுட்பம்  கிடைக்கும் காலக்கட்டத்தில் நடக்கிறது, உங்கள் பையில் ஒரு காகித நோட்டும் இல்லாமல் நீங்கள் எளிதாக வாழ்க்கை நடத்தலாம்அத்தகைய தொழில்நுட்பம் இன்று கிடைத்துள்ளதுபீம் செயலியை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் இந்த செயலியை உங்கள் மொபைல் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் இந்த செயலியை பதிவிறக்கும் செய்து வைத்திருந்தால் அவர்களுடன் நீங்கள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி வர்த்தகம் செய்யத் தொடங்கலாம்இதன் மூலம் நாட்டுக்கு பல 100 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும். இந்தப் பணத்தை ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித்தர பயன்படுத்தலாம், வாய்ப்பு வசதிகளற்ற மக்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்க பயன்படுத்தலாம்.

    தொழில்நுட்பம் மிகுந்த சக்திவாய்ந்தது, நாட்டின் பொருளாதாரத்தை அதனைக் கொண்டு முற்றிலுமாக மாற்றியமைக்கலாம். அதனைப் பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும்அதன் முக்கியத்துவத்தை மக்கள் விரைவில் புரிந்து கொள்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன். நம்மால் இதனை செய்ய இயலவில்லை என்றால் ஒரு இளைஞனை அமர்த்தி நமக்கு உதவி செய்யும் வகையில் பயன்படுத்திக் கொள்கிறோம்.  நாம் இத்தகைய தொழில்நுட்ப சகாப்தத்தில் வாழ்கிறோம். 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பம் சமுதாயத்தில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில்  ஆற்றிய பங்கினைவிட  ஆயிரம் மடங்கு பங்கினை ஆற்றிவருகிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் செய்ய இயலாதவற்றை வெறும் முப்பதே ஆண்டுகளில் செய்து இருக்கிறோம். இன்று நாம் பயன்படுத்தும் எந்தவொரு தொழில்நுட்பமும், நாம் வெளியேறும் போது தேவையற்ற ஒன்றாக மாறிவிடக்கூடும். தொழில்நுட்ப மேம்பாட்டின் வேகம் இத்தகையதுஉலகில்  செயற்கை அறிவு மிகப்பெரிய பங்கினை ஆற்றக்கூடிய நாள் வெகு தூரத்தி்ல் இல்லை.

   செயற்கை அறிவுத்துறை மனிதகுலத்தையே இயக்கப்போகிறது, செயற்கை அறிவு வேலைவாய்ப்புகளை பாதிக்குமா என்று விவாதிக்கப்படும். ஓட்டுநர் இல்லாத மோட்டார் கார்கள் விரைவில் வந்துவிடும். செயற்கை அறிவு மூலம் இயக்கப்படும் மோட்டார் கார்கள் விரைவில் வரவுள்ளன. ஓட்டுநர்களுக்கு என்ன ஆகும்? செயற்கை அறிவு வேலைவாய்ப்புகளை உருவாக்குமா? செயற்கை அறிவு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.   மொத்த உலகமுமே புதிய சிந்தனையை நோக்கி சென்று கொண்டுள்ளது.  இதனை  ஏற்கும் நிலையில் புதிய தலைமுறை தயாராகிவருகிறது. உலகம் மிக விரைவாக மாறிவருகிறது. இத்தகைய தொழில்நுட்பத்திற்கு நாம் ஈடுகொடுக்க முடியாவிட்டால் நமக்கும் வளர்ச்சிக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி நாம் தகுதியில்லாதவர்களாக ஆகிவிடுவோம், நமது மதிப்பை இழந்துவிடுவோம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பம் மனிதகுலத்தை இயக்குகிறது. இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

விண்வெளி தொழில்நுட்பத்துறையில் நாம் மிகுந்த மரியாதையை பெற்றுள்ளோம்விண்வெளி தொழில்நுட்பத்துறையில் இந்தியாவுக்கு உலகெங்கும் மரியாதை உள்ளது. செவ்வாய்க் கிரகத்தை முதல் முயற்சிலேயே சென்றடைவதில் உலகில் எவரும் வெற்றிப் பெறவில்லை. ஆனால் இந்தியா செவ்வாய் கிரகத்தை முதல் முயற்சிலேயே அடைவதில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு எவ்வளவு செலவானது? இன்று டாக்சியை நாம் கிலோமீட்டருக்கு ரூ.10 அல்லது 11 வீதம் வாடகைக்கு அமர்த்திக்கொள்கிறோம். அந்த வரையில் இந்த விஷயத்தில் உலக சராசரியில் 7 ரூபாய் வீதம்  செவ்வாய்க் கிரகப் பயணத்தை  நடத்தியுள்ளோம்.  இந்தியா தனது செவ்வாய்க் கிரகப் பயணத்திட்டத்திற்கு  ஹாலிவுட் திரைப்படம் ஒன்றுக்கான செலவைவிட குறைவாகவே செலவிட்டுள்ளது. இதுதான் இந்திய விஞ்ஞானிகள் புரிந்த அதிசயம். இது தான் இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றல். எனினும், விண்வெளி தொழில்நுட்பத்துறையில் இருக்கும்  இந்தியாவின் அறிவியல் ஆற்றலை, பயன்பாட்டு அறிவியல் துறையில், பயன்படுத்துவதில் நாம் பின்தங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. தில்லி வந்தவுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தை ஆளுகைக்கு எவ்வாறு பயன்படுத்துவது  என்பது குறி்த்து அரசின் அனைத்து இணை செயலாளர்களுடனும் பயிலரங்கு ஒன்றை துறை வாரியாக நான் நடத்தினேன். இன்று நமது சாலைகளை நிறைய வளைவுகளுடன் அமைக்கிறோம். ஆனால் மிகக் குறைந்த வளைவுகளுடன் சாலைகளை அமைக்க முடியும். அதாவது விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர் சாலைகளை வடிவமைத்து அமைக்க இயலும்நில உரிமைகளை பழங்குடியின மக்களுக்கு வழங்க நான் விரும்பியபோது இதற்கு விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினேன். இதற்கு எந்த அத்தாட்சியும் எனக்குத் தேவையில்லை. விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் நான் இதைச் செய்ய இயலும், இந்த நி்லம் முன்பு விவசாயத்திற்கு பயன்படுத்திய வன நிலம் என்பதை காணமுடியும். 15 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களைக் கொண்டு பழங்குடியினர் ஒருவர் பயிர் செய்த வந்த நிலத்திற்கு  உரிமையை அவருக்கே வழங்க முடியும்.

   இன்று நீதித்துறை அமைப்புகளில் நீதி வழங்கும் திறன் குறிப்பாக குற்றவியல் நீதி வழங்கும் துறையில் திறன் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப ஆதரவு காரணமாக  இது அதிகரித்துள்ளது. அறிவியல் பூர்வமாக தகுதி உள்ள சாட்சியங்களை மக்கள்  மிக எளிதாக மொபைல் தொலைபேசி போன்ற கருவி மூலம் பெறமுடியும். குற்றத்தடய அறிவியல் இன்றைய காலக்கட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம்  பெற்று வருகிறது. விபத்து வழக்குகளில் சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கேமரா படத்தைக் கொண்டு முடிவுக்கு வர இயலும். தொழில்நுட்பமும். குற்றத்தடய அறிவியலும் நீதித்துறை அமைப்பு முழுமையும் வலுப்படுத்தி  எளிதாக்குவதில் பெரும் பங்காற்ற முடியும்நமது முடிவுகள் இவற்றை எவ்வளவு விரைவில் பயன்படுத்துகிறோமோ அவ்வளவு சிறப்பாகவும், துல்லியமாகவும், விரைவாகவும் அமையும்.

  முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் அம்பயர்தான் யார் வெற்றி பெற்றவர் யார் தோல்வியடைந்தவர் என்பதை நிர்ணயிப்பார்இப்போது இதனை 3-வது அம்பயர் நிர்ணயிக்கிறார். குறிப்பிட்ட பந்து சரியானதா இல்லையா என்பதை அவர் முடிவு செய்வார். அவர் பந்தை பார்க்கத் தவறிவிட்டாலும் 3-வது அம்பயர் இது குறித்த தகவலை அளிப்பார். அதற்கான ஒளி சமிக்ஞைகளை அவர் அனுப்புவார். இந்நிலையில், அம்பையர்கள் தங்களது வேலைகளை இழந்துவிட்டனர் என்று ஒருசிலர் கூறுவதுண்டு. ஆனால் அம்பயர் வேலையை இழக்கவில்லை அதே சமயம் தனது திறனை உயர்த்தியுள்ளார். என்னைப் பொருத்தவரை தொழில்நுட்பத்தை நாம்  கடைப்பிடித்தால் அதன் பயன்களை எளிதாக அடையலாம்.

  சற்று முன் திரு ரவிசங்கர், இலவசப் பணிகள் பற்றி தமது உரையில் குறிப்பிட்டார். இது குறித்து நான் உங்களுடன் விவாதித்தே ஆக வேண்டும். இந்த நாட்டின் மக்கள் சுயநலக்காரர்கள் என்று கூறப்படுவது சரியல்ல. நாம் இந்த நாட்டின் இயல்பை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் இயல்பு வித்தியாசமானது.

   நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் இது பற்றி பேச இது சரியான தருணம் அல்ல, ஆனாலும் இது பொருத்தமுடையது, எனவே ஒரு சிறிய உதாரணத்தை பகிர்ந்து கொள்ள அனுமதி அளியுங்கள். 2014 பொதுத் தேர்தலின் போது எனது கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உயர்நிலைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் 2014 தேர்தல் அறிக்கையை அறிய நாடே காத்திருந்தது. செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியினர் இனிமேல் மக்கள் ஆண்டுக்கு ஒன்பது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக 12 சிலிண்டர்களை பெறுவார்கள் என்று அறிவித்தது. அவர்களைப் பொருத்தவரை தேர்தல் அறிக்கையும், எரிவாயு மானியமும்ஒன்றுக்கொன்று எதிராக தோன்றியது அதிசயம்தான்.

   இந்த சம்பவம் குறித்து குறிப்பிடுவதற்கு  எனக்கு அவசியம் ஏற்பட்டது. துரதிருஷ்டவசமாக  நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மக்களவை, மானிய விலை எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பிரச்சினைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தது. அரசு அமைத்த பிறகு செங்கோட்டையிலிருந்து நான் நாட்டுக்கு ஆற்றிய உரையில்யாருக்கு எல்லாம் வசதி உள்ளதோ அவர்கள் எல்லாம் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அதற்கான வேண்டுகோளை விடுத்தேன் என்றும் சொல்லலாம். இதனையடுத்து எனதருமை  குடிமக்களில் 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தங்களது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒருதலைப்பட்சமான சிந்தனையில் ஒன்பது சிலிண்டரா அல்லது பன்னிரண்டா என்ற பிரச்சினையில் மூழ்கி இருந்தோம். குடிமக்களின் ஆற்றலை கவனிக்கத் தவறிவிட்டோம்.

    ஒரு சமயம் நான் மருத்துவர்களிடம் உங்கள் வளமிக்க மருத்துவ பணிகளுடன் எனக்கு சற்று உதவ முடியுமா என்று கேட்டேன். ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதியன்று உங்களிடம் மருத்துவ உதவி பெற வரும் கருவுற்ற பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையை வழங்குவோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்று கேட்டேன். இதனையடுத்து மனசாட்சியுள்ள பல பேறுகால சிறப்பு மருத்துவர்கள் தங்களது கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் முன்னதாக இத்தகைய இலவச சேவையை அறிவிக்கும் பலகைகளை  ஏற்படுத்தினர். அதன்படி ஒவ்வொரு மாதம் ஒன்பதாம் தேதி கருவுற்ற பெண்களுக்கு இலவச ஆலோசனையும் மருந்துகளையும் வழங்க உறுதியேற்றுள்ளனர்.

 ஓய்வு பெற்ற விதவையாகிப்போன ஆசிரியை ஒருவர் தனது எரிவாயு மானியத்தை திருப்பி அளிக்க வரிசையில் காத்திருந்தார். அதே சமயம் கடமைப் பொறுப்புள்ள பேறுகால மருத்துவர் ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி கருவுற்ற பெண்களுக்கு ஆர்வத்துடன் உதவி வழங்கத் தொடங்கினார். ஆர்வமுள்ள இளம் பொறியாளர்கள் பேரிடர் மேலாண்மையில் தங்களது திறன்களை பயன்படுத்தினார்கள். பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நமது இளம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் தொடர்ந்து பல மணிநேரம்  ஆராய்ச்சி நடத்த ஒப்புக்கொண்டனர். 42,000 இளைஞர்கள் தொடர்ச்சியாக 36 மணி நேரம் பணியில் ஈடுபட்டு சுமார் 400 தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர் என்பது நாட்டிற்கு நலம் பயக்கும் செய்தியாகும். அதே போல நமது வழக்கறிஞர் நண்பர்களும் தங்களது நுட்பம் சார்ந்த அறிவாற்றலை ஏழை மற்றும் வாய்ப்புகளற்ற மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, இத்தகைய முயற்சிகள் நாட்டின்  கட்டமைப்பை சிறந்ததாக மாற்றியமைக்க கட்டாயம் உதவும்.

   இந்த எதிர்பார்ப்புகளுடன் நான் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தலைவர் திரு கன்வில்கர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வது நீதி அமைப்பில் தொழில்நுட்பத்தை புகுத்துவது ஆகியன நாட்டுக்கு ஆற்றும் சிறந்த சேவைகள் என்று நாம் நம்புகிறேன்அனைவருக்கும் நன்றி.

*********



(Release ID: 1538319) Visitor Counter : 469


Read this release in: English