குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

போர்ட் பிளேரில் உள்ள சிறைக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வருகை

வீர சவர்க்கார் அடைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறைக்கும் சென்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUL 2018 8:30PM by PIB Chennai

ஆங்கிலேய அரசின் மிகவும் கொடூரமான, மனிதத்தன்மையற்ற தண்டனைகளைச் சந்தித்த வீரம் செறிந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் & நிகோபார் தீவுகளில் உள்ள வரலாற்றுக் கறை படிந்த சிறைக்கு  இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு  இன்று (05.07.2018) சென்று பார்த்தார். அவர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

வீர சவர்க்கார் அடைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறைக்கும் சென்ற குடியரசுத் துணைத் தலைவர், அம்மாபெரும் விடுதலை வீரருக்கும் அஞ்சலி செலுத்தினார். விடுதலை வீரர்களின் உறுதியைக் குலைக்கவும், பிற கைதிகளுடனும் உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடும் எந்த வாய்ப்பையும் தராமல் இருப்பதையும் நோக்கமாகக் கொண்டே சிறிய, தனிமைச் சிறையில் அவர்கள் பூட்டிவைக்கப்பட்டிருந்தனர் என்று அவர் கூறினார்.

 

 

 

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1537988) வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க: English