விவசாயத்துறை அமைச்சகம்

2018-19 பருவத்தில் அனைத்து கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:22PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாய்க்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில் 2018-19 பருவத்தில் அனைத்து கரீப் பயிர்களுக்கும் அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

2018-19 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் 150 சதவீதம் அளவுக்கு நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு ஏற்ப அனைத்து கரீப் பயிர்க்ளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க பரிந்துரை செய்திருந்தது.

 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


(Release ID: 1537713)
Read this release in: English