மத்திய அமைச்சரவை

இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனம் & சவுதி அரேபியாவின் சான்றிதழ் பெற்ற பொது கணக்காளர்கள் அமைப்புகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:32PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பெரு நிறுவன ஆளுகை, தொழில்நுட்ப ஆராய்ச்சி & ஆலோசனை, தர உறுதிபாடு, தடயவியல் சார்ந்த கணக்கீடு, சிறு மற்றும் நடுத்தர செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள், இஸ்லாமிய நிதி, தொழில் வல்லமை மேம்பாடு மற்றும் கணக்கு பதிவியல் துறையில் இருதரப்பு நலன் சார்ந்த துறைகளில், இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனம் & சவுதி அரேபியாவின் சான்றிதழ் பெற்ற பொது கணக்காளர்கள் அமைப்பும் 2014ஆம் ஆண்டு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முக்கிய விளைவுகள்:

   இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளின் நலன் மற்றும் பரஸ்பர பயனளிக்கும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்து பணியாற்றுவதே நோக்கம்.

  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய பட்டயக் கணக்கர் பயிற்சி நிறுவன உறுப்பினர்கள் தங்களது தொழில் எல்லையை நீட்டிக்கவும், உள்ளூர் மக்களின் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு உதவி அளித்து வலுப்படுத்துவதில், இந்திய பட்டயக் கணக்கர் பயிற்சி நிறுவனம் ஒரு அமைப்பாக மாறுவதற்கும், வகை செய்கிறது.

  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கணக்கு பராமரிக்கும் மற்றும் தணிக்கைத் தொழிலை ஊக்குவிப்பதில், இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனத்திற்கு வழிவகை ஏற்படுத்துவதுடன், இத்தொழிலை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கும் உதவிகரமாக இருக்கும்.

பலன்கள்:

  இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனம், ஜெட்டா, ரியாத் மற்றும் சவுதி அரேபியாவில் மூன்று கிளைகளுடனும், பல்வேறு  அளவிலான தொழிலில் ஈடுபட்டுள்ள 200 உறுப்பினர்களுடனும்  கிழக்காசியாவில் வலுவான அமைப்பாக திகழ்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய பட்டயக் கணக்கர்கள் பயிற்சி நிறுவனம் மற்றும் சவுதி சான்றிதழ் பெற்ற பொது கணக்கர்கள் அமைப்பு இடையே வலுவான செயல்பாட்டு உறவுகளை மேம்படுத்துவதுடன், இந்திய பட்டயக் கணக்கர்களுக்கு இந்தியாவில் வலுவான தொழில் வாய்ப்புகளை அளிக்கும். மேலும், கிழக்காசியாவில் பணியாற்றுவோரிடம் நம்பிக்கையை அதிகரித்து, இந்திய பட்டயக் கணக்கர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவிகரமாக இருக்கும்.

பின்னணி:

  இந்திய பட்டயக் கணக்கர் பயிற்சி நிறுவனம், இந்தியாவில் பட்டயக் கணக்குத் தொழிலை முறைப்படுத்த ஏதுவாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  பட்டயக் கணக்கர் சட்டம் 1949 என்ற சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட நிலையான அமைப்பாகும். மன்னரின் உத்தரவு மூலம் பிறப்பிக்கப்பட்ட சவுதி சான்றிதழ் பெற்ற பொதுக் கணக்கர்கள் ஒழுங்குமுறை விதிகள், அந்நாட்டில் கணக்கு பதிவு மற்றும் தணிக்கை தொழிலை மேம்படுத்த ‘சவுதி சான்றிதழ் பெற்ற பொதுக் கணக்கர்கள் அமைப்பு‘-க்கு அதிகாரம் அளிக்கிறது.

==================



(Release ID: 1537707) Visitor Counter : 133