நிதி அமைச்சகம்

கடந்த மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாயான ரூ. 94,016 கோடியைவிட அதிகமாக 2018 ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.95,610 கோடி

கடந்த நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.89,885 கோடி
2018 ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் வசூல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2018 2:20PM by PIB Chennai

2018 ஜூன் மாதத்தில்  ஜி.எஸ்.டி. மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த வருவாய் ரூ.95,610 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.15,968 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.22,021 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ. 49,498 கோடி, (இறக்குமதி மீதான வசூல் தொகை ரூ.24,493 கோடியை உள்ளடக்கியது.) செஸ் வரி ரூ.8,122 கோடி (இறக்குமதி மீதான வசூல் ரூ.773 கோடியை உள்ளடக்கியது.) 2018 ஜூன் மாதம் முடிய, தாக்கல் செய்யப்பட்ட  மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர் 3 பி, கணக்கு விவர எண்ணிக்கை 64.69 லட்சமாகும்.

  2018 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்வுக்கு பின்னர் மத்திய அரசு, மாநில அரசுகள் ஈட்டிய மொத்த வருவாய் சி.ஜி.எஸ்.டி.க்கு,  ரூ.31,645 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி.க்கு ரூ.36,683 கோடி.

   கடந்த மாத வருவாயான ரூ.94,016 கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு மாத வருவாய் வசூல் ரூ.95,610 கோடியாகும். மேலும், கடந்த நிதியாண்டின் சராசரி மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூலான ரூ.89,885 கோடிக்கு மாறாக, ஜூன் மாதத்தில் மொத்த வருவாய் வசூல் ரூ.95,610 கோடியாகும்.

  2018 ஜூன் மாதத்தில், மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே   ரூ,50,000 கோடிக்கு தற்காலிக கூடுதல் தீர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2018 பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூ.35,000 கோடிக்கு கூடுதலாக இந்த தற்காலிக தீர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

=============


(வெளியீட்டு அடையாள எண்: 1537393) வருகையாளர் எண்ணிக்கை : 150
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी