நிதி அமைச்சகம்
ஜி.எஸ்.டி. அனுபவம் – அருண் ஜேட்லி
Posted On:
01 JUL 2018 1:51PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி என்ற புதிய மறைமுக வரி முறைக்கு நாடு மாறி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வந்த பதினேழு வரிகள் மற்றும் பல்வேறு தீர்வுகளுக்கு பதிலாக இந்த ஒரே வரி உள்ளது. முன்பு இருந்த முறை வரி செலுத்தும் ஒவ்வொருவரும் பல்வேறு கணக்குகளைத் தாக்கல் செய்வது, பல்வேறு வரி விதிப்போர் மற்றும் விரிவிதிப்பு ஆணையத்துடன் பேச வேண்டிய நிலை, ஏற்கெனவே வரி செலுத்தப்பட்டிருந்தபோதிலும் மேலும் வேறு வரி செலுத்த வேண்டிய நிலை, சரக்குகள் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வரி செலுத்த வேண்டிய நிலை, பல்வேறு சோதனைச் சாவடிகள் மற்றும் தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை காரணமாக தாமதம் காரணமாக விரக்தியை சந்திப்பதுடன் இந்த வரி முறையில் இருந்து தப்பிப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சரக்கு மற்றும் சேவை வரிக்கான அடிப்படை சிந்தனை அசலானதாக இருக்கவில்லை. இது உலகின் பல்வேறு நாடுகளில் சோதித்து பார்க்கப்பட்டது. பல்வேறு சிந்தனைகளை சிந்தையில் கொண்டு இந்திய மாதிரியை உருவாக்க வேண்டி இருந்தது. நேரடி வரியைப் போலின்றி மறைமுக வரி கொஞ்சம் பிற்போக்குத்தனமானதாகும். பல்வேறு செலுத்தும் திறன் கொண்ட பரந்த மாகள் தொகை பிரிவுகள் கொண்ட நாட்டில் அனைவரும் ஒரே விகிதத்தில் வரி செலுத்தும் போது, வசதி கொண்டவர்களுக்கும் வசதி இல்லாதவர்களுக்கும் வேறு வேறாக இருக்கும் நேரடி வரியைப் போன்று இது வேறு வேறாக இருக்க முடியாது. ஆனால் வரியற்ற அல்லது குறைந்த வரி விதிக்கப்படும் பண்டகங்கள் தேர்வில் இந்தியா போன்ற ஒரு சமூகத்தில் மாற்றம் இருக்க முடியும். இரண்டாவதாக ஒருங்கிணைக்கப்பட வேண்டிய மாறுபட்ட சந்தை கொண்ட பன்முகச் சந்தைகள் உள்ளன. மூன்றாவதாக இந்திய கூட்டாட்சியின் சாரம் மதிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதுடன் மத்திய மற்றும் மாநிலங்கள் நீதி ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். பலுவீனமான மத்திய அரசு தேசிய இறையாண்மை மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் தீங்காக இருக்கும் என்பதுடன் பலவீனமான மாநிலங்களால் வளர்ச்சியை அளிக்க முடியாது. இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு இல்லை என்பதால், மத்திய அரசு வருவாயை இழந்து மாநிலங்களின் வருவாயை வலுப்படுத்த முடியாது. மத்திய அரசு தாக்குபிடிக்க முடியாமல் போனால், இந்தியா அதாவது மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் பாரதத்திற்கு என்னவாகும்?
தோல்வி கண்ட ஜி.எஸ்.டி.யின் யு.பி.ஏ. மாதிரி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜி.எஸ்.டி. யோசனையை சில மாநில முதலமைச்சர்கள் ஏன் ஏற்கவில்லை என யு.பி.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்கள் சிலர் அவ்வப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஜி.எஸ்.டி. தேவை என ஒவ்வொருவரும் விரும்பியபோதிலும், யு.பி.ஏ.வின் ஜி.எஸ்.டி. மாதிரியை ஒரு மாநிலம் கூட விரும்பவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட மாநிலங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. ஒற்றை வரி முறையை நோக்கிய நகர்வில் சி.எஸ்.டி. என்னும் மத்திய விற்பனை வரியை நீக்குமாறு யு.பி.ஏ. மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. சில குறிப்பிட்ட காலத்திற்கு சி.எஸ்.டி.க்கு பதிலாக இழப்பீடு அளிக்கப்படும் என மாநிலங்களுக்கு அது உறுதிமொழி அளித்தது. இதனை ஏற்று மாநிலங்கள் சி.எஸ்.டி.யை நீக்கிவிட அதற்கு இழப்பீடாக மத்திய அரசு மாநிலங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்பட்டது. சி.எஸ்.டி. இழப்பீட்டை மாநிலங்கள் கோரிய போது, மத்திய அரசு வேறு மாதிரி நடந்து கொண்டது. 2014 மே மாதம் நான் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபோது, யு.பி.ஏ. அரசு நடந்து கொண்ட விதம் காரணமாக பி.ஜே.பி. ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசை நாங்கள் மத்திய அரசை நம்பவில்லை என என்னிடம் தெரிவித்தன. முந்தைய சி.எஸ்.டி. இழப்பீடு அளிக்கப்பட்டால்தான் தான் அவர்கள் ஜி.எஸ்.டி. குறித்து பேசுவார்கள். யு.பி.ஏ. அரசு மாநிலங்களை கைவிட்டது ஏற்கத்தக்கதல்ல என்றும் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மத்திய வருவாயில் உள்ள கடும் அழுத்தங்களையும் மீறி, சி.எஸ்.டி. இழப்பீடு பாக்கிகளை அளிப்பது என நான் முடிவு செய்தேன். அதன்படியே நான் அதை செய்தேன். சி.எஸ்.டி. இழப்பீடு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகே ஜி.எஸ்.டி. தொடர்பான பேச்சுக்களுக்கு வர மாநிலங்கள் விருப்பம் தெரிவித்தன. ஜி.எஸ்.டி. வரி முறைக்கு மாறும்போது மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மாநிலங்களுக்கு இருந்த கவலை, ஜி.எஸ்.டி.யை கொண்டு வரும் முயற்சியில் யு.பி.ஏ.வின் தோல்விக்கு இரண்டாவது காரணமாகும். இந்த வருவாய் இழப்பு மாநிலங்களுக்கு எப்படி ஈடு செய்யப்படும்? அவர்களது கோரிக்கை நியாயமானதாக தோன்றினாலும் யு.பி.ஏ. இதை கவனிக்க முன்வரவில்லை. இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கான யோசனை எதுவும் யு.பி.ஏ. கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தத்தில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பெரும் கவலை கொண்டன. இழப்பீடு இல்லாவிடில் ஜி.எஸ்.டி. இல்லை என அவை கொடி பிடித்தன. சி.எஸ்.டி. இழப்பீட்டை அளித்த வலிமையுடன் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்த நான், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஆலோசனை நடத்திய பின்னர், வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 14 சதவீத கூடுதல் வருவாய் அளிக்க மாநிலங்களிடம் நான் ஒப்புக் கொண்டேன். இதைக் கேட்டு மாநிலங்கள் மகிழ்ச்சி அடைய, ஜி.எஸ்.டி.யைக் கொண்டு வருவதில் மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். கூட்டாட்சி கொள்கைகளில் கூட்டாட்சி கொள்கைகளில் எங்களது நேர்மறையான உறுதிப்பாடு தெளிவாக உருவாக்கப்பட்டது.
பெட்ரோலிய பொருட்கள் விவகாரம்
பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் ப.சிதம்பரம் ஆகிய இருவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் நான் ஆலோசித்தபோது இதற்கு அவர்கள் தயாராக இருப்பதாக தெரியவில்லை. ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலிய பொருட்கள் குறித்து யு.பி.ஏ.வின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? யு.பி.ஏ. தயாரித்தளித்த அரசியல் சட்ட திருத்தத்தில் பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்கு வெளியே நிரந்தரமாக வைத்திருந்தது. மீண்டும் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் வரை (அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பொதுவாகவே கடினமானது) யு.பி.ஏ. நிலைப்பாட்டின்படி பெட்ரோலியப் பொருட்கள் எப்போதும் ஜி.எஸ்.டி.யில் இருந்திருக்காது. மாநிலங்களின் நம்பிக்கையை பெற்ற நான் மாநிலங்களுக்கு சி.எஸ்.டி. இழப்பை அளித்த போது பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சினையை ஒரு நிபந்தனையாக முன்வைத்தேன். அரசியல் சட்ட திருத்தத்தில் பெட்ரோலிய பொருட்கள் இணைக்கப்படுவதற்கான யோசனையை தெரிவித்ததுடன் எந்த தேதியில் இருந்து அவை ஜி.எஸ்.டி.க்குள் வரும் என்பதை கவுன்சில் முடிவு செய்யலாம் என குறிப்பிட்டேன். இதற்கு மாநிலங்கள் ஒப்புக் கொண்டன. யு.பி.ஏ. அரசு பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்கு வெளியே வைத்திருந்தது. ஆனால் அதற்கு மாறாக நாங்கள் அதனை அரசியல் சட்டத்திற்குள் கொண்டு வந்து ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்யும் போது அதனை அமல்படுத்தலாம் என்று கொண்டு வந்துள்ளோம். இதற்கான நான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்பதுடன், மாநிலங்கள் தங்களது வருவாய் நிலை குறித்து திருப்தி அடையும் போது, அவற்றுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
ஓராண்டில் கிடைத்த அனுபவம்
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட இருந்தபோது, அதை தள்ளிப்போடுமாறு காங்கிரஸ் எங்களுக்கு அறிவுறுத்தியது. தயக்கம் கொண்ட அரசு சீர்திருத்த முடிவுகளை ஒருபோதும் எடுக்க முடியாது. நாங்கள் முன்னெடுத்துச் சென்றோம். முதல் கட்டத்தில் நாங்கள் முதல் கட்ட விகிதங்களை நிர்ணயித்தோம். வர்த்தகங்கள், தொழில்துறையிடம் இருந்து ஏராளமான கோரிக்கை வரத்தொடங்கிய பின்னர் நாங்கள் விகிதங்களை திருத்தியமைக்க தொடங்கினோம்.
முதல் சில கூட்டங்களில் ஜி.எஸ்.டி. கவுன்சில் விருப்பம் தெரிவிக்கப்பட்ட இடங்களில் வரி விகிதங்களை குறைக்கத் தொடங்கியது. ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவைகளில் நாம் பார்த்தால், கூட்டாக இன்று போடப்பட்டுள்ள வரி விகிதங்கள், முந்தைய வரி முறையில் இருந்ததை விட குறைவாகும். கூடுதல் வரி தாக்கங்கள் விலகத் தொடங்கி, வரி செலுத்துவதற்கான பொறுப்பு குறையத் தொடங்கியுள்ளது.
ஒருமித்த கருத்தை உருவாக்க, நாங்கள் ஜி.எஸ்.டி.யை ஒருமித்ததாக ஆக்க அரசியல் சட்ட திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். ஜி.எஸ்.டி.யை சாத்தியமாக்கும் அனைத்து சட்டங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. விதிகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் முன் வைக்கப்பட்டது. அவை ஒருமனதாக ஏற்கப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27 கூட்டங்கள் நடத்தப்பட்டு, இதுவரை அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்து அடிப்படையில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. அனைத்து விகிதங்களும் விகித குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒருமித்த கருத்து மூலம் நிர்ணயிக்கப்பட்டது. கவுன்சிலில் மாறுபட்ட கருத்துகள் எழுந்தபோதெல்லாம் மாநில அமைச்சர்களின் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு, ஏதேனும் ஒருவகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் கூட்டாட்சி சமத்துவம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை நான் உணர்கிறேன். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டுறவு கூட்டாட்சி அடிப்படையிலான முடிவு எடுக்கும் ஆணையத்தில் இந்தியாவின் முதல் அனுபவமாகும். தோல்விக்கான ஆபத்தை நம்மால் ஏற்க முடியாது என்பதால், அனைத்து மாநிலங்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அது செயல்படுகிறது. கூட்டங்கள் எப்பொதும் ஒருமித்த கருத்து அடிப்படையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் சில அமைச்சர்கள் அளித்த தொலைக்காட்சிப் பேட்டிகளில் மட்டுமே இந்த ஒருமித்த கருத்து காணப்படவில்லை. இது அவர்களது அரசியல் நிலைப்பாட்டிக்குத் தேவைப்பட்டிருக்கலாம். கவுன்சிலுக்குள் ஒருமித்த கருத்து மற்றும் ஆரோக்கியமான விவாதம் மற்றும் கவுன்சில் கூட்டத்திற்கு வெளியே மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பது என்ற அனுபவத்தையை நான் விரும்புகிறேன்.
நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்கள் ஒன்றில் சுமூகமான மாற்றம் ஒன்றை நாம் கொண்டுள்ளோம். ஒரே இரவில் அனைத்து சுங்கச் சாவடிகளும் மறைந்துபோய் விட்டன. உள்ளீட்டு வரி இருப்பு முறை கணக்குகள் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. தானாக முன்வந்து பதிவு செய்வதை ஜி.எஸ்.டி. அதிகளவு ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கைக்காக நடத்தப்பட்ட விரிவான கணக்கீட்டில் 2017 டிசம்பரில் சுமார் 17 லட்சம் பதிவுகள் ஜி.எஸ்.டி. உச்சவரம்புக்கு கீழ் உள்ளவர்கள் என்ற போதிலும் ஜி.எஸ்.டி.யின் ஒரு பகுதியாக இருக்க முன்வந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இதே போல் எளிதான கணக்கீட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற போதிலும், அவர்கள் வழக்கமான ஜி.எஸ்.டி. முறையை தேர்வு செய்துள்ளனர்.
வரி இணக்கத்தை மேலும் உறுதிப்படுத்த, இ-வே பில் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலைப்புள்ளி சரிபார்க்கப்படும்போது, வரி ஏய்ப்பு மிகவும் கடினமானதாகி விடும். வரி செலுத்துபவரின் வாழ்வு எளிமையாகியுள்ளது. அவர் வரி கணக்கை இணையதளத்தில் தாக்கல் செய்வதுடன் பல்வேறு ஆணையங்களுடன் அவரது தொடர்பு கடந்த காலமாகிவிட்டது. கணக்கு தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதற்கான நுணுக்கத்தை அமைச்சர்கள் குழு ஏற்கனவே உருவாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த வரிச் சுமை குறைந்துவிட்டது. வரித் தளம் அதிகரிக்கும்போது, வரிகளையும் விகிதங்களையும் குறைக்கும் தனது திறன் மேலும் அதிகரிக்கும்.
மிகச்சிறிய வர்த்தகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்டவர்கள் ஜி.எஸ்.டி. செலுத்துவதில்லை. ரூ. 1 கோடி வரை வருவாய் கொண்டவர்கள் தங்கள் விற்றுமுதலில் ஒரு சதவீததுடன் ஜி.எஸ்.டி.யை இணைத்து செலுத்தி காலாண்டு கணக்குகளை தாக்கல் செய்யலாம்.
ஒற்றை விகிதம்
இந்தியாவுக்கு ஒற்றை விகித ஜி.எஸ்.டி.யை ராகுல் காந்தி ஆதரிக்கிறார். இது தோல்வியடந்த யோசனை. அதிக அளவில் வரி செலுத்த திறன் ஒட்டுமொத்த மக்களுக்கும் உள்ள நாடுகளில் மட்டுமே ஒற்றை விகித ஜி.எஸ்.டி. செயல்படும். சிங்கப்பூரில் உள்ள மாதிரி புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளபோதிலும், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள்தொகை முற்றிலும் மாறுபட்டது. உணவுக்கும் ஆடம்பர பொருட்களுக்கு சிங்கப்பூரில் 7 சதவீத ஜி.எஸ்.டி. உள்ளது. இது இந்தியாவில் சாத்தியப்படுமா? ஜி.எஸ்.டி. என்பது பின்னடைவு தரும் வரி என்பதால் ஏழைகளுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். எனவே பெரும்பாலான உணவுப் பொருட்கள் – வேளாண் பொருட்கள் மற்றும் ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதர சில பொருட்களுக்கு மிதமான வரி இருக்க வேண்டும். மற்றவற்றுக்கு அதிக வரி விதிக்கலாம். வசூல் அதிகரிக்கும்போது இதர பல பொருட்கள் 28 சதவீத விகிதத்தில் இருந்து குறைக்கப்படலாம். ஆடம்பர பொருட்களுக்கு மாத்திரம் கூடுதல் வரி விதிக்கப்படலாம். வரி வசூல் அதிகரிப்பதைப் பொறுத்து, நடுத்தர விகிதத்தில் உள்ள பொருட்களை இணைக்கலாம் என்ற போதிலும், நாம் இந்த புதிய வரி முறையில் ஏற்படும் முன்னேற்றங்களைபார்ப்பதுடன் வசூல் அதிகரிப்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
வரித் தாக்கம்
நேரடி வரியில் ஜி.எஸ்.டி. ஏற்படுத்திய தாக்கம் ஏற்கெனவே கண்களுக்கு புலப்படுகிறது. வர்த்தக வருவாயை வெளியிடவேண்டிய நிலையில் இருப்பவர்கள் வருமான வரிக்காகவும் தங்களது வருவாயை வெளியிட வேண்டியுள்ளது. முதல்கட்ட குறியீடுகளின்படி நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது. 2017 ஜூலை முதல் 2018 மார்ச் வரை முதல் ஒன்பது மாதங்களில் ஜி.எஸ்.டி.யின் செயல்திறனைப் பார்க்கும்போது, சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி., ஐ.ஜி.எஸ்.டி. மற்றும் தீர்வைஆகிய அனைத்தையும் சேர்க்கும்போது, மொத்த ஜி.எஸ்.டி. வசூல் நமக்குத் தெரியும். முதலாவது ஒன்பது மாதங்களிலேயே, வசூலிக்கப்பட்ட மொத்த தொகையான ரூ. 8.2 லட்சம் கோடி, வருடாந்திர கணக்கில் ரூ. 11 லட்சம் கோடி, 11 சதவீத வளர்ச்சியை அளிக்கும். அதாவது நுகர்வோருக்கான வரி குறைக்கப்பட்ட போடிலும் வரலாற்று ரீதியான வளர்ச்சியை இது கண்டுள்ளது. இன்னும் வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, வரி வசூல் மேலும் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி. நாட்டின் வரி அடித்தளத்தை வலுப்படுத்தி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு கூடுதலாக 1.5 சதவீதத்தை சேர்க்கும்.
இழப்பீட்டு தீர்வை உதவியுடன் இன்றைய தினம் மாநிலங்கள் 2015-16ஐ விட கூடுதலாக 14 சதவீத வரி அடித்தள உயர்வை பெறுகின்றன. தற்போது தடுக்கப்பட்டுள்ள ஐ.ஜி.எஸ்.டி. படிப்படியாக விலக்கப்படும்போது, இழப்பீட்டு தீர்வை இன்றியும் பெரும்பாலான மாநிலங்கள் 14 சதவீத வளர்ச்சி இலக்கை விஞ்சும். இன்றும் கூட இந்த இழப்பீட்டு தேவை தற்போதைய இழப்பீட்டு அளவான ரூ. 7000 கோடியை விட கூடுதலாக அளிக்கப்படுகிறது என்பதையும் மாநிலங்களுக்கு ஏற்படும் எந்த வருவாய் இழப்பபியும் ஈடுசெய்வதற்காக அளிக்கப்படுகிறது என்பதையும் சிந்தையில் கொள்ள வேண்டும். குறைவான வளர்ச்சி கொண்ட நுகர்வு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. தனது வரி அடித்தளத்தை விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது வளர்ச்சி நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கத்த்க்க ஆதாரங்களை இது அளிக்கிறது.
மறைமுக வரி அடித்தளம் விரிவடைகிறது. நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. வர்த்தகம் மேற்கொள்வது எளிதாக்கப்பட்டு இருக்கிறது. பெரும் இடையூறு எதுவும் இன்றி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஆரம்பகட்ட பிரச்சனைகளுக்கு பின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவை அனைத்திற்காகவும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்களை வருவாய்த்துறை செயலர் திரு. ஹஸ்முக் ஆதியா, சி.பி.ஐ.சி.யின் மற்றும் வருவாய் மற்றும் மத்திய மாநில அரசுகளின் வரித் துறை அதிகாரிகளுக்கும், ஜி.எஸ்.டி.என். அதிகாரிகளுக்கும் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முனேற்றத்திற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. எதிர்காலத்திற்கான மேல் நடவடிக்கையில் மேலும் எளிமைப்படுத்துவது மற்றும் வரி விகித கட்டமைப்பை மிதமாக்குவது மற்றும் கூடுதல் சரக்குகளை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வருவது ஆகியவை அடங்கும். வருவாய் நிலைப்படுத்தப்படும்போதும் ஜி.எஸ்.டி. நிலைப்படும்போது, ஜி.எஸ்.டி. கவுன்சில் இதனை கவனத்தில் கொண்டு செயல்படும் என நான் நம்புகிறேன்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் தீவிரமான செயல்திறன் கொண்ட மற்றும் சக்திவாய்ந்த முடிவு எடுக்கும் கூட்டாட்சி அமைப்பு என்பதை நிரூபித்திருப்பது ஜி.எஸ்.டி.யின் பெரும் வெற்றியாகும். மாநில நிதியமைச்சர்கள் கூட்டாட்சி நிர்வாகத்தில் வரலாறு படைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதும் எனக்கு கிடைத்த கவுரவமாகும். ஜி.எஸ்.டி.யை ஒரு வரலாற்று சிறப்பு கொண்ட மாற்றமாக ஆக்கியதற்காகவும் அதனை அ னுபவிப்பதற்கான மதிப்பு கொண்டதாக அளித்ததற்காகவும் நிதியமைச்சர்களுக்கு நன்றிகள்.
****
(Release ID: 1537380)