புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
12-வது புள்ளியியல் தினம் இன்று (29.06.2018) கொண்டாடப்பட்டது
Posted On:
29 JUN 2018 3:29PM by PIB Chennai
கொல்கத்தா இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பேராசிரியர் பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், ரூ.125 நினைவு நாணயம் மற்றும் ரூ. 5 சாதாரண நாணயம் ஆகியவற்றை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.
12-வது புள்ளியியல் தினத்தை இன்று (29.06.18) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையும், இந்தியப் புள்ளியியல் நிறுவனமும் கூட்டாக கொண்டாடியது. பேராசிரியர் பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் திரு. டி.வி. சதானந்தா கவுடா, மேற்குவங்காள தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் திரு. பிரத்யா பாசு, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் விஜய் கேல்கர், இந்தியப் புள்ளியியல் நிறுவன மன்றத்தின் தலைவர் பேராசிரியர் கோவர்தன் மேத்தா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், ரூ.125 நினைவு நாணயம் மற்றும் ரூ. 5 சாதாரண நாணயம் ஆகியவற்றை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வெளியிட்டார். பேராசிரியர் பி.வி. சுகாத்மே விருது 2018 மற்றும் பேராசிரியர் சி.ஆர். ராவ் விருது 2017 ஆகியவற்றை வென்றவர்களின் புள்ளியியல் துறை பங்களிப்பு நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது.
------
(Release ID: 1537218)
Visitor Counter : 143