ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மத்திய ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சிறப்புச் செயலாளர்களுடன் டிஷா முயற்சிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்

Posted On: 28 JUN 2018 4:12PM by PIB Chennai

மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (டிஷா)-வின் வெற்றிகரமான இரண்டாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒருவார கால நிகழ்வுகள் ஜுன் 25 முதல் நடைபெற்று வருகின்றன. நாளை (29.06.18) இது நிறைவடைகிறது. இதையொட்டி, மத்திய ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சிறப்புச் செயலாளர்களுடன் டிஷா முயற்சிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். டிஷா முன்முயற்சி மற்றும் அனைவரும் பங்கேற்கும் நிர்வாகத்தில் இதனை சக்திவாய்ந்த கருவியாக மாற்றுவதற்கான வழிவகைகள் தொடர்பான தலைப்புகள் இந்த விவாதங்களில் மையமாக இருந்தன. ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு. ராம் கிருபால் யாதவும் இந்தக் கூட்டத்தில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

     மாவட்ட அளவிலான டிஷா குழுக் கூட்டங்களின்போது, திந்தோரி, ஜோத்பூர், ஜஷ்பூர், சிக்கார், ஜலான், ஜபல்பூர், சம்பல் ஆகிய மாவட்டங்களின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சர் நேரடியாக கலந்துரையாடினார்.

--------


(Release ID: 1537132) Visitor Counter : 206
Read this release in: English , Hindi