வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு அறக்கட்டளைக்கு தொகுப்பு நிதி அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 27 JUN 2018 3:38PM by PIB Chennai

தேசிய ஏற்றுமதி காப்பீடு கணக்கு அறக்கட்டளைக்கு ரூ. 1000 கோடி மானிய உதவி (தொகுப்பு) அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2017-18 முதல் 2019-20 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு இந்த தொகுப்பு நிதி பயன்படுத்தப்படும். 2017-18ம் ஆண்டு ரூ. 400 கோடி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கு தலா ரூ. 300 கோடி தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு அறக்கட்டளைக்கு அளிக்கப்படும்.

இந்த தொகுப்பு நிதி தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு அறக்கட்டளை நாட்டில் இருந்து உத்தி பூர்வமான மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் ஏற்றுமதிக்கு ஆதரவளிக்க வலுப்படுத்தும்.

 

****


(रिलीज़ आईडी: 1536929) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English