பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் வழங்குவதற்கான விலை மாற்றத்திற்கும் ஒப்புதல்
Posted On:
27 JUN 2018 3:41PM by PIB Chennai
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான அமைப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் விலை மாற்றத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2018-19-ம் ஆண்டு சர்க்கரை பருவத்தில் 2018 டிசம்பர் 1-ம் தேதி முதல் 2019 நவம்பர் 30-ம் தேதி வரையிலான காலம் தொடர்பான கீழ் கண்டவற்றுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
- சி கனரக கரும்புக்கழிவுச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை தற்போதுள்ள லிட்டருக்கு ரூ. 40.85 லிருந்து லிட்டருக்கு ரூ. 43.70 ஆக நிர்ணயம் செய்தல். இதற்கும் கூடுதலாக ஜி எஸ் டி மற்றும் போக்குவரத்துச் செலவினம் செலுத்தப்பட வேண்டும்.
- பி கனரக கரும்புக்கழிவுச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை லிட்டருக்கு ரூ. 47.49 ஆக நிர்ணயம் செய்தல். இதற்கும் கூடுதலாக ஜி எஸ் டி மற்றும் போக்குவரத்துச் செலவினம் செலுத்தப்பட வேண்டும்.
- 2018-19-ம் ஆண்டு பருவத்தின் சர்க்கரைக்கான மதிப்பிடப்பட்ட நியாயமான லாபகரமான விலை அடிப்படையில் எத்தனால் விலை நிர்ணயிக்கப்படுவதால் இந்த விலையை அரசு அறிவிக்கும் நியாயமான, லாபகரமான விலை அடிப்படையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் நிர்ணயிக்கும்.
- 2019-20-ம் எத்தனால் வழங்குதல் ஆண்டுக்கு எத்தனால் விலைகள் கரும்புக்கழிவுச் சாறு, சர்க்கரை ஆகியவற்றின் நியாயமான லாபகரமான கரும்பு விலை அடிப்படையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்படும்.
அனைத்து மதுபான ஆலைகளும் இந்தத் திட்டத்தினால் பயனடையும். அவற்றில் மிகப் பல எத்தனால் கலந்து பெட்ரோல் திட்டத்திற்கு எத்தனால் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனால் வழங்கும் நிறுவனங்களுக்கு லாபகரமான விலை அளிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கித்தொகையை குறைக்க இது உதவும். இதனால் கரும்பு விவசாயிகளின் இன்னல்கள் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
சி கனரக கரும்புச்சாறு கழிவு அடிப்படை எத்தனாலுக்கு அதிக விலை கிடைப்பதால் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்துக்கு எத்தனால் கிடைப்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பி கனரக கரும்புச்சாறு கழிவு மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றிலிருந்து எத்தனால் வாங்குவது முதல் முறையாக அனுமதிக்கப்படுவதும் இந்தத் திட்டத்துக்கு எத்தனால் கிடைப்பதை அதிகரிக்கும். பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை அதிகரிப்பதால் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலை குறைப்பு, வேளாண்துறைக்கு ஆதரவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாடு, காற்றுத்தூய்மைக் கேடு குறைதல், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுதல் போன்ற பல பயன்கள் ஏற்படும்.
2014 முதல் எத்தனால் நிர்வகிக்கப்பட்ட விலையை அரசு அறிவிக்கை செய்கிறது. இதனால் கடந்த நான்காண்டுகளில் எத்தனால் கிடைக்கும் நிலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்த 38 கோடி லிட்டர் எத்தனால் என்ற அளவு 2017-18-ல் 140 கோடி லிட்டர் ஆக உயரும்.
இந்த சர்க்கரைப் பருவத்தில் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி மிக அதிகமாக உயர்ந்திருப்பதால் சர்க்கரை விலைகள் குறைந்துள்ளன. இதன் விளைவாக சர்க்கரைத் தொழில்துறையினர் விவசாயிகளுக்கு பணம் செலுத்தும் திறன் குறைந்ததால் விவசாயிகளின் நிலுவைத் தொகைகள் உயர்ந்தன. இந்த நிலுவைத் தொகைகளை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எத்தனால் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை சர்க்கரை ஆலைகளின் வருவாயின் ஒரு பகுதி என்பதால் சி கனரக கரும்புச்சாறு கழிவிலிருந்து கிடைக்கும் எத்தனாலின் விலையை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக பி கனரக கரும்புச்சாறு கழிவு மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றின் விலைகளை அரசு நிர்ணயிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாகவும், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளின் நிலுவைத் தொகைகளை வழங்கும் நிலை உயரும். மேலும். எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்துக்கு எத்தனால் கிடைப்பதும் அதிகரிக்கும். 2018 மே மாதம் அரசு அறிவித்த 2018 தேசிய உயிரி எரிபொருட்கள் கொள்கைபடியும் இந்த நடவடிக்கை ஏற்புடையதாக அமைகிறது. எத்தனால் உற்பத்திக்கான கச்சா பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்தக் கொள்கை உதவுகிறது.
பின்னணி:
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை அரசு 2003-ம் ஆண்டு சோதனை அடிப்படையில் தொடங்கியது. பின்னர் இது அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு விரிவாக்கப்பட்டது. மாற்று மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்தும் இந்தத் திட்டம் இறக்குமதியை நம்பியிருத்தலை குறைக்கவும் பயன்படுகிறது. வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கவும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
-----
(Release ID: 1536928)