சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2018 ஜூலை 1 முதல் ஆக்ஸிடோசின் மருந்துகளுக்குத் தடை உள்நாட்டு பயன்பாட்டுக்கு கே.ஏ.பி.எல். மட்டும் இந்த மருந்தை தயாரிக்கும்
Posted On:
27 JUN 2018 11:22AM by PIB Chennai
2018 ஜூலை 1ம் தேதியில் இருந்து உள்நாட்டு உபயோகத்திற்கான ஆக்சிடோசின் மருந்துகளை பொதுத் துறை மட்டுமே தயாரிக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆக்சிடோசின் மற்றும் அதன் இணை தயாரிப்பு மருந்துகளை இறக்குமதி செய்யவும் அது தடை விதித்துள்ளது.
2018 ஜூலை முதல் தேதியில் இருந்து உள்நாட்டு உபயோகத்திற்காக இந்த மருந்தை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது. கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் & ஃபார்மாசூடிகல்ஸ் லிமிடெட் (கே.ஏ.பி.எல்.) என்ற பொதுத் துறை நிறுவனம் மட்டும் இதனை உள்நாட்டு உபயோகத்திற்காக ஜூலை 1-ம் தேதி முதல் தயாரிக்க அனுமதிக்கப்படும். உள்நாட்டு உபயோகத்திற்கான ஆக்ஸிடோசின் மருந்துகளை அதனை உற்பத்தி செய்யும் கே.ஏ.பி.எல். நிறுவனம் மட்டுமே பதிவு செய்துகொண்ட பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகம் செய்யும். ஆக்ஸிடோசின் வேறு பெயர்களில் அல்லது வடிவத்தில் தனியார் மருந்தகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
நாட்டில் உள்ள பதிவு செய்துகொண்ட பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் கே.ஏ.பி.எல். நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அளவு மருந்துகளை ஆர்டர் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மருந்து சில்லரை மருந்தகங்கள் அல்லது வேறு உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்காது.
கே.ஏ.பி.எல். நிறுவனத்தின் தொடர்பு விவரங்கள்:
இ-மெயில்: instmkt@kaplindia.com
மொபைல்: டாக்டர் முகேஷ் குமார்: 9880175766; திரு. சந்தோஷ் குமார்: 9901611277; திரு. சுனில் குமார் கைமால்: 9845231019
***
(Release ID: 1536740)