வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு மனிதர்களிடம் இருந்தே தீர்வு வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
Posted On:
21 JUN 2018 6:24PM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு துண்டுபட்ட அணுகுமுறை இல்லாமல் முழுமையான அணுகுமுறை தேவை என்றும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு மனிதர்களே தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு கூறினார். மிருதுளா ரமேஷ் எழுதிய ‘தி கிளைமேட் சொல்யூஷன் – இண்டியாஸ் கிளைமேட் சேஞ்ச் கிரைசிஸ் அண்ட் வாட் வி கேன் டு அபவுட் இட்’ (பருவநிலை தீர்வு – இந்தியாவின் பருவநிலை மாற்ற பிரச்சனையும் அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன) என்ற நூலை வெளியிட்ட பின்னர் கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
“பண்டைக் காலம் தொட்டு மனிதகுல வரலாறு இந்த கோளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும் எனில், இந்த சிக்கல்கள் இயற்கையால் உருவாக்கப்படாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களை நம்மால் மாற்றவோ அல்லது நிறுத்தவோ முடியாது என்றபோதிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றத்தை நாம் போக்க முடியும் என்பதுடன் அதற்குத் தீர்வு காண முடியும்” என அமைச்சர் குறிப்பிட்டார்.
“பருவநிலை மாற்றம் என்பது மனித குலத்திற்கு தீவிர அச்சுறுத்தல் ஆகும். உதாரணத்திற்கு ஒவ்வொரு நாடும் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பனி உருகத் தொடங்கி விட்ட்து. இதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து கடலின் வெப்பத்தையும் மாற்றிவிடும். இது கடலில் உள்ள உயிரி பரவலை மட்டுமின்றி, இந்தக் கோளின் ஒட்டுமொத்த உயிரி பரவலையும் பாதிக்கும்” என அமைச்சர் கூறினார்.
வெப்பநிலை வெறும் இரண்டு டிகிரி அதிகரித்தால் கூட விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு பிரச்சினையை ஏற்படுத்தும். தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை பருவநிலை மாற்றம் மேலும் மோசமாக்கும். மனிதர்களால் உருவான இந்த பருவநிலை மாற்ற பிரச்சினைக்கு தங்கள் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொரு தனிநபரும் நடவடிக்கை எடுக்க அவர் அழைப்பு விடுத்தார். சுற்றுச்சூழலுக்காக பல்வேறு நாடுகள் பல்வேறு உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது குறித்தும் அவர் விளக்கினார்.
பிரச்சினைகள் பற்றி மட்டுமின்றி அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசும் இந்த நூலாசிரியரை அமைச்சர் பாராட்டினார்.
*****
RCN/MSV
(Release ID: 1536206)
Visitor Counter : 209