புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

காற்றுத் தொழில்துறைக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கடலோரப் பகுதிகளுக்கான காற்று சக்தி தேசிய இலக்குகளை அரசு அறிவித்துள்ளது

Posted On: 19 JUN 2018 5:45PM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் இந்தியாவின் முதல் 1 ஜிகாவாட் கடல் காற்று திட்டத்திற்காக சமீபத்தில் ஆர்வம் உள்ள நிறுவனங்களிடமிருந்து அறிக்கை கோரியது. இது இந்தியா மற்றும் உலகளாவிய தொழில் துறைகளிடம் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

காற்றுத் தொழில்துறைக்கு நம்பிக்கை ஏற்படுத்த காற்று ஆற்றல் திறன் மேம்பாட்டிற்காக, அமைச்சகம் 2022 ஆம் ஆண்டில் 5 ஜிகாவாட், 2030 ஆம் ஆண்டில் 30 ஜிகாவாட் ஆகிய நடுத்தர மற்றும் நீண்டகால இலக்கை அறிவித்துள்ளது.

இந்தியாவின் கடற்கரை காற்று இலக்கு 60 ஜிகாவாட் ஆகும். மற்ற இலக்குகளோடு ஒப்பிடுகையில் இந்த இலக்கு மிதமானதாகும். 34 ஜிகாவாட் மற்றும் 2022-ல் ஜிகாவாட் சூரிய இலக்கு பெறுவதற்கு திறந்த கடல்களில் பெரிய காற்று சக்தி விசையாழிகள் நிறுவுவதில் உள்ள சிரமமே இதற்கு காரணமாகும்.

கரையோர கடல் விசையாழிகளை, கரைப்பகுதி   காற்று விசையாழிகள் விட அதிகத்திறன் மற்றும் பரிமாணங்களைக் கொண்டது எனலாம்.

     கரையோரக் கடல் காற்று சக்தி, நாட்டில் ஏற்கனவே உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொகுப்பிற்கு  புதிய பரிமாணத்தைக் கொண்டு வரும். 

                                                ******


(Release ID: 1536054) Visitor Counter : 245


Read this release in: English , Hindi