நித்தி ஆயோக்

வேளாண்மை மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைக்க முதலமைச்சர்கள் துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது

Posted On: 19 JUN 2018 5:01PM by PIB Chennai

வேளாண்மை மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைக்க முதலமைச்சர்கள் துணைக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் அமைப்பாளராகவும், ஆந்திரா, பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும், நிதிஆயோக் உறுப்பினர் திரு ரமேஷ்சந்த்-ம் உறுப்பினர்களாக உள்ளனர்.  பிரதமர் அறிவுறுத்தலின்படி விவசாயிகளின் வருவாயை 2022 – ல் இருமடங்காக உயர்த்துவதற்கு பல பரிமாணங்கள் மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறைகள் தேவை. இத்திட்டத்திற்கான நிரந்தரத் தீர்மானம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி நிதி ஆயோக் அமைப்பில் இயற்றப்பட்டது.  இத்திட்டம் சார்ந்த விவாதத்தின் போது விதைப்பிற்கு முன் மற்றும் அறுவடைக்குப்பின் நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் அணுகுமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.  இவை விவசாயிகளின் வருவாயை இருமடங்காக்கி நிலைத்த சொத்துக்கள் உருவாக்குவதற்கும், அவர்களது துன்பங்களை குறைக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டது.

     வேளாண்மைத் துறை மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான ஒருங்கிணைந்த கொள்கை அணுகுமுறைகளை ஏற்படுத்த, ஏழு மாநில முதலமைச்சர்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாளராகவும் மத்தியப் பிரதேச முதலமைச்சரை பிரதமர் நியமித்துள்ளார். இத்துணைக்குழுவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் அமைப்பாளராக மற்றும் ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் துணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.  துணைக் குழுவின் அனைத்துத் சேவைகளை நிதிஆயோக் வழங்கும்.

                                                  ******



(Release ID: 1536052) Visitor Counter : 114


Read this release in: English , Hindi