குடியரசுத் தலைவர் செயலகம்
கிரேக்க தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் சந்திப்பு; பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகளுக்கு தலைமை தாங்கினார்
Posted On:
18 JUN 2018 8:38PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், கிரீஸ் நாட்டிற்கான பயணத்தின் போது தனது அரசு முறை நிகழ்ச்சிகளை இன்று (18,06,2018) தொடங்கினார். முன்னதாக அந்நாட்டு அதிபர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அதிபர் திரு புரோகோபிஸ் பாவ்லோபோஸை சந்தித்தார்.
கிரீஸ் அதிபருடன் மற்றும் தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் போது, அதிபர் இருநாடுகளுக்கு இடையிலான பழமைவாய்ந்த நாகரீகத்தின் பிணைப்பை குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். இந்தியா மற்றும் கிரீஸ், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பல கலாச்சாரங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றன. இவை இருதரப்பு மற்றும் பன்முகத்தன்மை பணிகளில் ஆழப்படுத்தியுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
இந்தியா, கிரீசின் அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் நடப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.
தெசாலோனிகி சர்வதேச விழா (2019)-ல் பங்கேற்க கவுரவ நாடு என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டதை இந்தியா ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார்.
தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர், கிரீஸ் பிரதமர் திரு அலெக்ஸிஸ் சிப்ரஸ் மற்றும் இருதலைவர்களையும் சந்தித்து இருநாடுகளுக்கும் பரஸ்பர அக்கறை கொண்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதித்தார்.
(Release ID: 1535939)
Visitor Counter : 98