குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தகவல் அறிந்த செயல்பாடுகள் மூலம் வளர்ச்சிக்கான அதிகாரமளித்தலின் காரணியாக ஊடகம் செயல்பட வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்

Posted On: 17 JUN 2018 8:28PM by PIB Chennai

மக்களின் தகவல் அறிந்த செயல்பாடுகள் மூலம் வளர்ச்சிக்கான அதிகாரமளித்தலின் காரணியாக ஊடகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான பிரச்சனைகளையும் ஆக்கப்பூர்வமான பொது விவாதம் தேவைப்படுவதையும் அவர் வலியுறுத்தினார். இதில் ஊடகத்தின் பங்கு இருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். மாநிலங்களவை தொலைக்காட்சி (ஆர்.எஸ்.டிவி) பணியாளர்களிடம் இன்று (17.06.2018) உரையாற்றிய திரு. நாயுடு, பொது விவாதம் என்பது எதிர்மறையாகவோ, எரிச்சலூட்டுவதாகவோ, பிரிவினை செய்வதாகவோ இருக்கக் கூடாது என்றார். மக்களை ஒன்றுபடுத்துவதாக அது இருக்க வேண்டுமே தவிர அவர்களை பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

சம கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிப்பை தருகின்ற நாடாளுமன்ற கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு செயல்படும் நிறுவனமான ஆர்.எஸ். டிவியின் கொள்கையும் அலைவரிசை நிகழ்ச்சிகளும் அதன் வழிகாட்டுதல்படி இருக்க வேண்டுமென்று திரு. நாயுடு தெரிவித்தார்.



(Release ID: 1535894) Visitor Counter : 96


Read this release in: English