குடியரசுத் தலைவர் செயலகம்

பொருளாதார, கலாச்சார மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மக்களுடனான தொடர்புகளை விரிவுபடுத்த கிரீஸில் உள்ள இந்திய சமூகத்தவர் உதவ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு. கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 17 JUN 2018 9:50PM by PIB Chennai

கிரீஸ், சுரினாம், கியூபா ஆகிய 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நேற்று (16.06.2018) மாலை கிரீஸூக்கு சென்றடைந்தார்.

கிரீஸூக்கான இந்திய தூதர் திருமதி  ஷம்மா ஜெய்ன் ஏதென்ஸ் நகரில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் திரளமாக கூடியிருந்த இந்திய சமூகத்தவரிடையே குடியரசுத் தலைவர் இன்று (17.06.2018) உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தொன்மையான நாகரிகங்களைக் கொண்ட கிரீஸூம், இந்தியாவும் நீண்டகால ஆழமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன என்றார்.

பலவகையான  துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வலுவான, பொருளாதார, உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். கிரீஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயலூக்கம் உள்ளவையாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்திய வர்த்தகர்களும், நிறுவனங்களும் கிரீஸில் தொழிற் சாலைகளை அமைப்பது  தொடங்கியுள்ளது என்றும், இதன் மூலம் கிரீஸில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரஸ்பர பங்குதாரர்களாக இருப்பது இரு நாடுகளுக்கும் மாபெரும் பயனளிக்கும் என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கிரீஸில் உள்ள இந்திய சமூகத்தவருக்கு முக்கியமான பங்கு உள்ளது என்றார். பொருளாதார, கலாச்சார மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மக்களுடனான தொடர்புகளை  விரிவுபடுத்த  இந்திய சமூகத்தவர்  உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

                                ********



(Release ID: 1535767) Visitor Counter : 81


Read this release in: English