பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தேசிய பழங்குடியின அருங்காட்சியகத்தை தில்லியில் அமைக்க உத்தேசம் : திரு. ஜூவல் ஓரம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2018 4:51PM by PIB Chennai
தேசிய அளவிலான பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனத்துடன் தேசிய பழங்குடியின அருங்காட்சியகத்தை தில்லியில் அமைக்க பழங்குடியின விவகார அமைச்சகம் உத்தேசித்துள்ளது. பழங்குடியின விவகார அமைச்சகத்தின் நான்காண்டு சாதனைகளை செய்தியாளர்களிடம் விளக்கிய துறைக்கான அமைச்சர் திரு.ஜூவல் ஓரம் இத்தகவலைத் தெரிவித்தார். பழங்குடியினரின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமையும் என்று அவர் கூறினார். அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான கருத்துரு நிதி ஆயோக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திரதின உரையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆறு நினைவிடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவற்றில் இரண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களை குஜராத் மாநிலம் நர்மதா, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்தியச்சிறை ஆகியவற்றில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1535584)
வருகையாளர் எண்ணிக்கை : 205