நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி முறையின் கீழ், சட்ட அதிகாரம் பெற்ற வரிஅலுவலரின் உதவியுடன் வரி செலுத்துவோர் வழி அதிகாரம் பெற்ற கையெழுத்தாளரின் மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்கள் மாற்றம்

Posted On: 14 JUN 2018 11:48AM by PIB Chennai

தங்கள் சார்பாக வரிசெலுத்துப் பதிவுக்கு விண்ணப்பம் செய்தபோது தங்களால் அதிகாரமளிக்கப்பட்ட இடையீட்டாளர்கள் தங்களது சொந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்களைப் பயன்படுத்திக்கொண்டது தொடர்பான புகார்கள் வரி செலுத்துவோரிடமிருந்து பெறப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது பயன்பாட்டாளர் சான்றாவணங்களை யார் சார்பாக முதல் இடத்தில் பதிவு செய்தார்களோ அந்த வரி செலுத்துவோரிடம் பகிர்ந்துகொள்வதில்லை. வரி செலுத்துவோர் அவர்களுடைய தயவில் இருக்க வேண்டியுள்ளது.

 

வரிசெலுத்துவோரின் இந்தச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அதிகாரம் பெற்ற கையெழுத்தாளரின் மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்களை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்கூறு ஜிஎஸ்டி முறையில் காணக்கிடைக்கிறது. மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்கள் வரி செலுத்துவோரின் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரம் பெற்ற வரி அதிகாரிகளால் கீழ்க்காணும் வகையில் மேம்படுத்தப்படலாம் :

 

பின்பற்ற வேண்டிய படிநிலைகள் :

  • வணிகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்ணுக்கான பாஸ்வேர்டைப் பெறுவதற்கு, வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரம் பெற்ற வரி அதிகாரியை அணுக வேண்டும்.

 

  • < வரி செலுத்துவோர் என்பதில் உள்ள https://www.gst.gov.in, தேர்வுத் தேடுதல் மூலம் சட்டஎல்லையைச் சரிபார்க்கலாம்.> ஒதுக்கீடு  செய்யப்பட்ட சட்ட எல்லை சிவப்பு எழுத்துகளில் காட்டப்பட்டிருக்கும்.>

 

  • வரி செலுத்துவோர் அவருடைய அடையாளத்தை நிலைநாட்டவும்  அவருடைய ஜிஎஸ்டி அடையாள எண் தொடர்பான விவரங்களைச் செல்லத்தக்கதாக்கவும் உரிய சான்று ஆவணங்களை வரி அதிகாரிகளிடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

 

  • குறிப்பிட்ட நபர் ஜிஎஸ்டி அடையாள எண் முறையில் ஒரு பங்குதாரராக அல்லது அதிகாரம் பெற்ற கையெழுத்தாளராகச் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பதை வரி அதிகாரி பரிசோதித்தறிவார்.

 

  • இந்த செயல்முறையை நம்பகப்படுத்துவதற்கு ஆதரவாக ஜிஎஸ்டி வலைத்தளத்தில் அவசியமான நிரூபணங்களை வரி செலுத்துவோர் வலையேற்றுவார்.

 

  • வரி செலுத்துவோரால் அளிக்கப்பட்ட புதிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்களை வரி அதிகாரி பதிவு செய்வார்.

 

  • ஆவணங்களை வலையேற்றம் செய்த பின்னர், வரி அதிகாரி  ஜிஎஸ்டி அடையாள எண் முறையில் பாஸ்வேர்டை மாற்றியமைப்பார்.

 

  • மாற்றியமைக்கப்பட்ட பயனாளர் பெயர் மற்றும் தற்காலிக பாஸ்வேர்ட் ஆகியவை வரி அதிகாரியால் குறிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கப்படும்.

 

  • வரி செலுத்துவோர் முதல் முறை லாக் இன் இணைப்பைப் பயன்படுத்தி   ஜிஎஸ்டி வலைத்தளமான https://www.gst.gov.in/ ஐ லாக் இன் செய்வது அவசியம்.

 

  • வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல் செய்யப்பட்ட பயனாளர் பெயர் மற்றும் தற்காலிக பாஸ்வேர்ட் ஆகியவற்றுடன் கூடிய முதல் முறை லாக் இன் செய்த பின்னர், பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படி கணினி அறிவுறுத்தும். மேற்குறிப்பிட்ட பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை இப்போது வரி செலுத்துவோர் பயன்படுத்தலாம்.


(Release ID: 1535575) Visitor Counter : 177


Read this release in: English