நிதி அமைச்சகம்

மத்தியத் தன்னாட்சி அமைப்புகளால் தேசிய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து தில்லியில் மாநாடு

Posted On: 13 JUN 2018 7:32PM by PIB Chennai

மத்தியத் தன்னாட்சி அமைப்புகளால் தேசிய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு ஒன்று தில்லியில் இன்று (13.06.2018) நடைபெற்றது. அனைத்து மத்தியத் தன்னாட்சி அமைப்புகளுக்கும் உரிய தளம் ஒன்றை அளிப்பதே இதன் தலையாய குறிக்கோளாக இருந்தது. தேசிய ஓய்வூதிய முறையின் காலம் தவறாமையின் இணக்கம் தொடர்பான தேசிய ஓய்வூதிய முறையின் அமலாக்கத்தில் முன்னேற்றத்தின்  பல்வேறு தேசிய ஓய்வூதிய முறை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளைக் கவனத்திற்குக் கொண்டுவருவதும் முன்னேற்றுவதும் செயல்படுத்தப்படும். இந்த மாநாட்டில் பெரும்பாலான மத்தியத் தன்னாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


(Release ID: 1535515)
Read this release in: English