சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இளம்பிள்ளைவாதம் இல்லாத நிலையை இந்தியா அடைந்திருப்பதற்கு ஃபோலியோ வல்லுநர்கள் பாராட்டு

Posted On: 13 JUN 2018 6:06PM by PIB Chennai

நாட்டுநலத்திட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஃபோலியோ இந்தியா வல்லுநர் ஆலோசனைக் குழுவின் 27 ஆவது கூட்டம் இன்று (13.06.2018) சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் திருமதி பிரீதி சூடன் தலைமையில் நடைபெற்றது. இந்த வல்லுநர் உறுப்பினர் குழுவினர்,    ‘நாடு சரியான வழியில் நடைபோடுகிறது’ என்ற முடிவுக்கு வந்தனர். இந்திய அரசின் வலுவான தலைமையும் மாநில அரசுகளின் பொறுப்பிலுள்ளவர்களும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஃபோலியோ இல்லாத நிலையை அடைவதிலும், இந்த நோய்க்கு எதிராக ஒவ்வொரு குழந்தையும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உத்தரவாதப்படுத்துவதிலும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தொடர்பாகக் கடைசியாக 2011 ஜனவரி மாதத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் ஃபோலியோ தடுப்பூசி போடுதல் மற்றும் குழந்தைப் பருவ நோய்த் தடுப்பு ஆகியவற்றில் போதுமான பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு அளிப்பதை இந்தத் திட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ளது.

     
                                                                          ***



(Release ID: 1535513) Visitor Counter : 123


Read this release in: English