நிதி அமைச்சகம்

வருமான வரி விதிமுறைகள், 1962-ல் மேற்கொள்ளவுள்ள உத்தேசத் திருத்தங்கள் – சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 13 JUN 2018 7:19PM by PIB Chennai

1962-ஆம் ஆண்டின் வருமான வரி விதிமுறைகளின்படி, பரிந்துரைக்கப்பட்ட படிவம் 36-ன் மூலமாக வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வழிவகுக்கிறது. மேலும் ஆட்சேபணைகளை படிவம் 36ஏ-யில் பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம்.

தற்போதுள்ள படிவம் 36-ன் கீழ் ஆகியவை நீண்டகாலமாக மாற்றம் செய்யாமல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிவங்களை மேல்முறையீட்டுக்கான  அதிக தகவல்களுடன் மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தீர்ப்பாயத்தில் தேங்கியுள்ள மேல்முறையீடுகளுக்கு விரைந்து தீர்வு காணும் கொள்கையை வகுப்பது அவசியம் என்று  வருமானவரித்துறை கருதுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு படிவம் 36, படிவம் 36ஏ, வருமானவரி விதிமுறை 47-ல் திருத்தங்களை மேற்கொள்ளும் வரைவு அறிவிக்கை வருமானவரி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் சம்பந்தப்பட்டவர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களுக்காக வருமானவரித்துறையின் www.incometaxindia.gov.in வலைதளத்தை அணுகலாம்.

வரைவு அறிவிக்கை மீதான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரி ts.mapwal[at]nic[dot]in  மூலமாக 2018 ஜூலை 2-ஆம் தேதி வாக்கில் அனுப்பலாம்.

                                ******

 



(Release ID: 1535429) Visitor Counter : 110


Read this release in: English