PIB Headquarters

சிபெட் நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புகள்

Posted On: 13 JUN 2018 7:03PM by PIB Chennai

தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) பல்வேறு டிப்ளமோ படிப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபெட் நிறுவனம் டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 2018=19ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) ஒப்புதல் பெற்ற டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகள் குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்றரை ஆண்டு காலத்துக்கான முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:

பிளாஸ்டிக் பதனீட்டுத் தொழில்நுட்பம் (PGD-PPT),  பிளாஸ்டிக் ஆய்வு மற்றும் தரக்கட்டுப்பாடு (PGD-PTQC) ஆகியவற்றில் சேருவதற்கு வேதியலை ஒரு பாடமாகக் கொண்ட மூன்றாண்டு பி.எஸ்ஸி அறிவியல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

CAD/CAM பயிற்சியுடன் கூடிய பிளாஸ்டிக் வடிவமைப்பு (PD-PMD with CAD/CAM) படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதி இயந்திரவியல் (Mechnical),  பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (Plastic Tech.,) கருவி மற்றும் உற்பத்திப் பொறியியல் (Tool/Production Engineering), மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics), ஆட்டோமொபைல் என்ஜினீியரிங் (Automobile Engineering), கருவி மற்றும் வார்ப்பியல் (Tool and Die Making) ஆகிய 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் மற்றும் சிபெட்டில் DPMT / DPT ஆகிய படிப்புகளையோ அவற்றுக்கு இணையான படிப்புகளையோ முடித்தவர்கள் தகுதியுள்ளவர்கள் ஆவர்.

மூன்றாண்டு காலத்துக்கான டிப்ளமோ படிப்புகள்:

பிளாஸ்டிக் அச்சுவார்ப்பியல் தொழில்நுட்பம் (Plastic Mould Technology) மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (Plastic Technology) ஆகிய மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.

சிபெட் நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ படித்தவர்கள் லேட்டரல் முறையில் (Lateral Entry) அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில் சேரலாம்.

இதற்கான நுழைவுத் தேர்வை எழுதுவது குறித்த விவரங்களை அறிய  www.cipet.gov.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

விண்ணப்பப் படிவங்கள் வந்து சேருவதற்கான கடைசி தேதி :  27.6.2018

நுழைவுத் தேர்வு தேதி : 1.7.2018

மாணவர் சேர்க்கை குறித்து அறிய தொடர்பு எண்கள் :  திரு. எம். பீர்முகமது மேலாளர் (9677123882), திரு. ஜி. சுரேஷ் தொழில்நுட்ப அலுவலர் (9444699936).

------------

ரெசின்/அரவி


(Release ID: 1535364) Visitor Counter : 235
Read this release in: English