வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நவீன நகரம் மையங்கள் பொதுச்சேவைகளை மேம்பட்ட மற்றும் திறனுடன் வழங்க உதவுகிறது: பூரி

Posted On: 11 JUN 2018 5:00PM by PIB Chennai

ஆலோசனைக் குழுவின் கூட்டம்  சூரத்தில் நடைபெற்றது.  நவீன நகர இயக்கத்தின் தனித்துவ அம்சமாக நவீன நகர மையம்  என்கிற  திட்டம் உள்ளது என்றும், பொதுச்சேவைகளை மேம்பட்ட மற்றும் திறனுடன் வழங்க இது உதவுகிறது என்றும் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார். 08.06.2018 அன்று சூரத்தில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் இணைந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தலைமை தாங்கி அவர் உரையாற்றினார்.

   இந்தக் கூட்டத்தில் சூரத், போபால், அகமதாபாத், புனே, விசாகப்பட்டினம், என்.டி.எம்.சி., புவனேஷ்வர் ஆகிய நவீன நகரங்களிலிருந்து வந்திருந்த சி.இ.ஓ. / பிரதிநிதிகள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சூரத் நவீன நகரத்தில் உள்ள பாம்ரோலி மூன்றாம் நிலை சுத்திகரிப்புத் திட்டம், ஆல்தன் குடிநீர் சுத்திகரிப்புத்திட்டம். நவீனசாலை  மேம்பாட்டுநிலை குறைந்த விலையில் வீட்டுவசதி திட்டங்கள், தொங்கும் தோட்டம், பி.ஆர்.டி.எஸ் (குஜராத் எரிவாயு வட்டம்) சூரத் கோட்டை எஸ்.எம்.ஏ.சி மையம் போன்ற சில திட்டங்களையும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் காண்பித்தனர்.

     சிசிடிவி கேமராக்கள்  மூலம் தூய்மைப்பணி கண்காணிக்கப்படுவதால் குப்பைகளை வீசுவது, குப்பையாக்குவது,  திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, குப்பைகளை இரவு நேரத்தில் எரிப்பது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும், இதனால் நவீன நகரங்கள் தூய்மையாகி வருவதை காணமுடிகிறது என்றும்,   போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது அதிகரித்திருப்பது சிறந்த போக்குவரத்து ஒழுக்கத்திற்கு  வழிவகுத்துள்ளது என்றும் திரு.பூரி கூறினார். 

      நவீன நகர இயக்கத்தின் கீழ் ரூ.50,000 கோடி மதிப்பிலான 1,530 திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு ரூ.30,675 கோடி மதிப்புள்ள 950 திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன அல்லது முடிக்கப்பட்டுள்ளன என்ற கூடுதல் தகவலையும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார். ரூ.20,000 கோடி மதிப்பிலான மற்ற 400 திட்டங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் நிலையில் உள்ளன.  இந்த இயக்கத்தில் அமலாக்கப்பட்டுள்ள மற்ற திட்டங்கள் நவீன சாலைகளாகும். இவற்றின் மூலம் இடத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 31 நகரங்களில் அனைவருக்கும் எளிதான தொடர்பை உருவாக்கி தந்துள்ளது.

-----



(Release ID: 1535095) Visitor Counter : 116


Read this release in: English