பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

சர்க்கரைத் துறையில் தற்போது நிலவும் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தலையீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 JUN 2018 3:09PM by PIB Chennai

சர்க்கரை ஆலைகள் மூடப்படுவதன் விளைவாக  விவசாயிகளுக்குப் பெரிய அளவில் கரும்பு விலை பாக்கி  நிலவும் பிரச்சினையில்  முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை வகித்த மத்திய அமைச்சரவை ரூ. 7,000 கோடி அளவுக்கான கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

  1. ஓர் ஆண்டுக்கான 30 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையின் கையிருப்பை உருவாக்குதல். இதற்காக ரூ. 1,175 கோடி அளவுக்குச் செலவு ஆகும். ஆயினும் சர்க்கரையின் சந்தை விலை மற்றும் இருப்பு அடிப்படையில், உணவு மற்றும் பொதுவினியோகத் துறை எந்த நேரத்திலும் இதனைப் பரிசீலனைக்குட்படுத்தலாம்.  இந்தத் திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட தொகையைக் காலாண்டு அடிப்படையில் திரும்பப் பெறலாம். விவசாயிகளின் கரும்பு விலை நிலுவைத் தொகையானது ஆலைகள் சார்பாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
  2. அவசியப் பொருட்கள் சட்டம், 1955 –ன் கீழ், சர்க்கரை விலை (கட்டுப்பாடு) உத்தரவு, 2018 அறிவிக்கை வெளியிட
    வெள்ளை/சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை ஆலை வாயிலில் நிர்ணயிப்பதால்  வெள்ளை/சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உள்ளூர் சந்தையில் சர்க்கரை ஆலையால் விற்கவோ வினியோகிக்கவோ முடியாது. வெள்ளை சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையானது கரும்பின் நியாயமான பரிவர்த்தனை விலை மற்றும் வெள்ளை/சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் குறைந்தபட்ச மாற்று அடக்கவிலை   அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். வெள்ளை/சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையானது ஆரம்பத்தில் ரூ.29 / கிலோ ஒன்றுக்கு என நிர்ணயிக்கப்படும். இது உணவு மற்றும் பொதுவினியோகத் துறையால் அவ்வப்போது நியாயமான பரிவர்த்தனை விலை முதலியவற்றின் திருத்தத்தின் அடிப்படையில்  திருத்தியமைக்கப்படலாம். இது நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில்  சர்க்கரை கிடைப்பதைப் பாதிக்காது. சர்க்கரையின் சில்லறை விற்பனை விலையை முற்றிலும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஏற்பாட்டை அரசு உத்தரவாதப்படுத்தும். தற்போது, சர்க்கரை ஆலைகளின் சரக்கிருப்பை வரையறைப்படுத்துவதன் மூலம் இது செய்யப்படும். நடப்பு சர்க்கரைப் பருவத்தின் (2018 செப்டம்பர் வரை) இருப்பானது ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்டு, உணவு மற்றும் பொதுவினியோகத் துறையால் எந்த நேரத்திலும் மறுபரிசீலனை செய்யப்படலாம்.
  3.  தற்போதைய வடிசாலைகளை மேம்படுத்துவதன் மூலமும்  சுத்திகரிப்புக் கொதிகலன்களை நிறுவுதல் மற்றும் சர்க்கரை ஆலைகளில் புதிய வடிசாலைகளை அமைத்தல் ஆகியவற்றின் வாயிலாகவும் சர்க்கரை ஆலைகளின் திறனை அதிகரிக்கலாம். அதிகப்பட்சம் ரூ.1,332 கோடி அளவுக்கு, கடனைக் காலம் தாழ்த்திச் செலுத்துவதற்கான சட்ட இசைவுக் காலம் உள்ளிட்டு  வட்டிமானியத் தொகையை ஐந்தாண்டு காலத்திற்கு அரசு ஏற்றுக்கொள்ளும். 

 



(Release ID: 1534757) Visitor Counter : 137


Read this release in: English , Marathi