உள்துறை அமைச்சகம்
எல்லைப்பாதுகாப்புப் படையின் 2-ஆவது எவரெஸ்ட் சிகர யாத்திரைக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு
प्रविष्टि तिथि:
05 JUN 2018 6:33PM by PIB Chennai
எல்லைப்பாதுகாப்புப் படையினன் 2-ஆவது எவரெஸ்ட் சிகர 15 உறுப்பினர் மலையேற்ற குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று (05.06.2018) பாராட்டு தெரிவித்தார். 2 குழுக்களாக சென்ற இந்தப் பிரிவினர் 2018 மே மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்தனர். பத்மஸ்ரீ லவ்ராஜ் சிங் தர்மசாக்டு என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை 7-ஆவது முறையாக சென்றடைந்து வரலாறு படைத்துள்ளார். இந்த மலையேற்ற குழுவின் தலைவரிடம் உள்துறை அமைச்சர் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். துணைத்தலைவரிடம் ரூ.1.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை அவர் வழங்கினார். இந்த மலையேற்ற குழுவினருக்கு ஆதரவு வழங்கிய குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
எல்லைப்பாதுகாப்புப் படையினர் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதுடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைதல் போன்ற வீரச் செயல்களிலும் வெற்றிகரமாக பங்கேற்பது குறித்து பெருமிதம் கொள்வதாகக் கூறினார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது மிகவும் கடினமான செயல் என்ற நிலையிலும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் இதனை இரண்டு முறை சாதித்திருக்கிறார்கள் என்று அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்
------
(रिलीज़ आईडी: 1534677)
आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English