பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பெண்களை இழிவாகக் காட்டுவதைத் தடுக்கும் சட்டத்தில் (IRWA) மேலும் திருத்தங்கள்

Posted On: 04 JUN 2018 7:04PM by PIB Chennai

மகளிரை இழிவாகச் சித்திரிப்பதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தில் (IRWA 1986)  திருத்தத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டு வர உத்தேசித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் கருத்துரைகல், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைகள், ஆர்வலர்களின் யோசனைகள் ஆகியவற்றுடன் சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு  புதிய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

மகளிர் இழிவுத் தடைச் சட்டத்தைத் திருத்தும் வகையில் கொண்டுவரப்படும் புதிய சட்ட முன்வடிவில் இடம்பெறும் அம்சங்கள்:

  • விளம்பரம் என்ற சொல்லுடன் டிஜிட்டல் வடிவம் அல்லது மின்னணு வடிவிலான விளம்பரங்கள் வாயிலாகவோ குறுஞ்செய்தி, இதர மின்னணு வழித் தகவல் பரிமாற்றங்கள் ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன.
  • விநியோக வரையறை என்பதில் வெளியீடுகள், உரிமம், கணிப்பொறி அல்லது இதர தகவல் சாதனம் மூலம் ஆதாரங்களைப் பதிவேற்றம் செய்தல் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
  • வெளியீடு என்பதை விளக்குவதற்கான பகுதி சேர்க்கப்படுதல்
  • சட்டத்தின் நான்காவது பிரிவு திருத்தப்படுகிறது. அதன்படி, எந்த ஒருவரும் ஏதாவது ஒரு முறையில் பெண்களை இழிவாகச் சித்திரிக்கும் அம்சங்கள் கொண்டு எதையும் வெளியிடவோ, விநியோகிக்கவோ, வெளியிட வழி செய்யவோ வேறு ஏதாவது வழியிலோ வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது.
  • மீறுவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (2000) விதிக்கப்படும் அபராதத்தைப் போன்ற அபராதம் விதிக்கப்படும்.
  • தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) கீழ் மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலரின் தலைமையில் மத்திய ஆணையகம் ஒன்றை உருவாக்குதல். அதில் இந்திய விளம்பர தரநிர்ணயக் குழு (Advertising Standards Council of India), இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India), தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், மகளிர் பிரச்சினைகளில் ஈடுபட்டுவரும் முக்கியமானவர்களில் ஒருவர் ஆகியோர் பிரதிநிதிகளாக இந்த ஆணையகத்தில் இடம்பெறுவர்.
  • மகளிரை இழிவுபடுத்தும் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் தொடர்பான புகார்கள், குறைகளைப் பெற்று ஆராயும்.
  •  
  • விளம்பரங்கள், வெளியீடுகள், எழுத்துகள், ஓவியங்கள், படங்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பெண்களை இழிவாகச் சித்திரிப்பதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு 1986ம் ஆண்டு மகளிர் இழிவுபடுத்தும் தடுப்புச் சட்டத்தை  (IRWA) மத்திய அரசு 1986ம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையதளம், பல்லூடக தகவல் பரிமாற்றம், கேபிள் டி.வி. போன்ற புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலமும் ஸ்கைப், வைபர், வாட்ஸ்அப், சாட் ஆன், ஸ்னாப்சாட், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகள் மூலமும்  பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
  • இத்தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு, சட்டத்தை அதற்கேற்ப விரிவுபடுத்தி, சட்டத்தை வலுப்படுத்துவது குறித்தும் அதன் மூலம் பெண்களின் நலனைப் பாதுகாப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. அதன் விளைவாக, பெண்களை இழிவுபடுத்த தடைச் சட்டம் (IRWA) 2012ம் ஆண்டு மாநிலங்களவையில் 2012ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட துறையின் பரிசீலனைக்காகவும் அனுப்பப்பட்டது.

***


(Release ID: 1534432) Visitor Counter : 2731


Read this release in: English