எஃகுத்துறை அமைச்சகம்

இந்திய எஃகு ஆணையம் 18 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ. 816 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது

प्रविष्टि तिथि: 31 MAY 2018 10:33AM by PIB Chennai

இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (SAIL) 2017 – 18 நிதியாண்டின் நான்காவது காலாண்டு மற்றும் 18 ஆம் நிதியாண்டின் நிதிப் பலன்களை அறிவித்துள்ளது. 18 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் லாபங்களை ஒப்படைத்த பிறகு, இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் 2017 – 18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.816 கோடி நிகர லாபத்தை ஈட்டி நிறுவனத்தின் ஏறுமுகச் செயல்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்திய அரசு அண்மையில் பணிக்கொடையை உயர்த்தியதற்கு ஒப்புதல் அளித்ததற்குப் பின்னர் இது நிகழ்ந்துள்ளது.

நிறுவனத்தின் ஐந்து ஒருங்கிணைக்கப்பட்ட எஃகுத் தொழிற்சாலைகளும் தனித்தனியே 18 ஆம் நிதியாண்டின் நான்காவது  காலாண்டில் லாபத்தை ஈட்டியுள்ளன. உற்பத்தியில் தொடங்கி வாடிக்கையாளர்களைச் சென்றுசேர்வது வரையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பிற்கான இந்திய எஃகு ஆணைய நிர்வாகத்தின் தொடர் முயற்சியின் விளைவாக, தீவிரச் சந்திப்படுத்தலுடன் கூடிய உற்பத்திப் பெருக்கம் மற்றும் புதிய ஆலைகளின் நிலைத்த தன்மை ஆகியன இப்பலனைக் கொடுத்துள்ளன. நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருட்கள் சலுகைகளுடன் கூடிய ஆரம்பம் முதல் இறுதி  வரையிலான புதிய அணுகுமுறையும் ஒரு வலிமையான நிலையைச் சாதித்துள்ளது.


(रिलीज़ आईडी: 1534369) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English