பாதுகாப்பு அமைச்சகம்
அக்னி-5 ஏவுகணை வெற்றிகர சோதனை
Posted On:
03 JUN 2018 2:37PM by PIB Chennai
அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) காலை 9.45 மணிக்கு (03.06.2018) வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்டது. அனைத்து ரேடார்கள், மின் ஒளியியல் சுவடு பற்றிச் செல்லும் நிலையங்கள், தொலை தூரத் தொடர்பு நிலையங்கள், ஏவுகணையின் விசை வீச்சு வளைவை அதன் பாதையில் செலுத்தின. ஏவுகணையின் அனைத்து நோக்கங்களும் இந்த பரிசோதனையில் எட்டப்பட்டன. பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததில் தொடர்புடைய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள், ஊழியர்கள் ஆயுதப்படையினர் மற்றும் தொழில் துறையினரைப் பாராட்டினார்.
----
(Release ID: 1534260)