குடியரசுத் தலைவர் செயலகம்

கடல் மார்க்கமக உலகை சுற்றிவந்த குழு குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2018 3:12PM by PIB Chennai

ஐ.என்.எஸ்.வி. தாரிணி கப்பலில் கடல் மார்க்கமாக சமீபத்தில்  உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படையின் ஆறு பெண் அதிகாரிகள் இன்று (2018 ஜூன், 1) தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை சந்தித்தனர்.

 

பெண் அதிகாரிகளை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவேற்ற குடியரசுத் தலைவர், அவர்கள் மேற்கொண்ட இந்த சாகச பயணம் சீற்றம் நிறைந்த கடலில் கடுமையான வானிலை, 194 நாட்களில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பயணம் என்பது சவால்கள் நிறைந்தது என்று கூறினார். அவர்களது வெற்றி அவர்களது விட்டுக்கொடுக்காத துணிச்சலான அணுகுமுறை, உறுதிப்பாடு, குழுச் செயல்பாடு, மன மற்றும் உடல் உறுதி மற்றும் நிபுணத்துவ சிறப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

 

இந்தக் குழு பெற்றுள்ள வெற்றி எனபது அவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இது ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உரித்த்தானதாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது என்றார். இந்த வெற்றி மகளிரின் ஆற்றலை வெளிப்படுத்துவது என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1534123) வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க: English