ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே துறை மின்-பயணச் சீட்டு முறைக்கு புதிய பயனர் இடைமுகம் அறிமுகம்

Posted On: 30 MAY 2018 12:36PM by PIB Chennai

ரயில்வே பயணிகளுக்கு உதவும் வகையில் இணையத்தில் புதிய வடிவில் பயனர் இடைமுகம் (User Interface) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பரிந்துரைப்படி ரயில்வே அமைச்சர் திரு. பியுஷ் கோயலின் தொலைநோக்குப் பார்வையில் புதிய பயனர் இடைமுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் www.irctc.co.in என்ற இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனாளிகள் எளிதில் கையாண்டு பயன்பெற வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களில் தொழில்நுட்பத்தின் மூலம் போதிய பலனைப் பெறும் வகையிலும் மக்கள் எளிதாக உரிய பயன்களைப் பெறும் வகையிலும் “டிஜிட்டல் இந்தியா” முன்முயற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த தலைமுறைக்கான மின்-பயணச் சீட்டு முறை (Next Generation e-Ticketing - NGeT) உருவாக்கப்பட்டு, ரயில் பயணத்துக்கான முன்பதிவு செய்வதற்கான சேவை எளிதாகவும் விரைவாகவும் அளிக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே பயணம் செய்ய முன்பதிவு செய்வோரில் மூன்றில் இரு பங்கு மின் - பயணச் சீட்டு மூலமே பதிவு செய்கிறார்கள்.

 

************



(Release ID: 1533902) Visitor Counter : 154


Read this release in: English , Hindi