கனரகத் தொழில்கள் அமைச்சகம்

மானேசரில் உள்ள சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையத்தில் தேசிய வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கட்டமைப்புத் திட்ட வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2018 5:49PM by PIB Chennai

மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, சர்வதேச  வாகனத் தொழில்நுட்ப மையத்தில், இரைச்சல், அதிர்வு & சீரற்ற ஒலி ஆய்வுக் கூடத்தை தொடங்கி வைக்கிறார்.

    மத்திய கனரகத் தொழில்கள் & பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.ஆனந்த் கீதே, அரியானா மாநிலம் மானேசரில் உள்ள சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையத்தில், தேசிய வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கட்டமைப்புத் திட்ட வசதிகளை தொடங்கி வைத்தார்.

    சர்வதேச  வாகனத் தொழில்நுட்ப மையம், வாகன சோதனை & தொழில் துறைக்கு சான்றிதழ் அளிக்கும் பணியை 2006 முதல் மேற்கொண்டு வருகிறது. இரைச்சல், அதிர்வு & சீரற்ற ஒலி ஆய்வுக் கூடம், செயலற்ற பாதுகாப்பு ஆய்வகம், மின்காந்த இணக்க ஆய்வகம், மற்றும் டயர் சோதனை ஆய்வகம் போன்ற வசதிகள் இந்த ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1533813) வருகையாளர் எண்ணிக்கை : 151
இந்த வெளியீட்டை படிக்க: English