குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அமைதி மட்டுமே வளர்ச்சிக்கு அவசியமாகும்: குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2018 3:58PM by PIB Chennai

வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு அமைதியான சூழ்நிலைதான் மிகவும் அவசியமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். எல்லையில் பதற்றம் இல்லை என்றால் மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்முவில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தை (Indian Institute of Integrative Medicine - IIIM) சார்ந்த விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்களிடையில் குடியரசுத் துணைத் தலைவர் இன்று (மே 28) பேசுகையில், தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்கு இடையூறு நேர்கையில் எதையும் சகித்துக் கொள்ளக் கூடாது என்றார்.

“அனைவருடனும் நல்லுறவைப் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது. அண்டை நாடுகள் பயங்கரவாதத்துக்குப் புகலிடம் தருவதையும் ஊக்குவிப்பதையும் ஆதரிக்கும் போக்கையும் கைவிட வேண்டும்” என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் திரு. என்.என். வோரா, வடகிழக்கு மண்டல அபிவிருத்தித் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆய்வு இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு –காஷ்மீர் துணை முதலமைச்சர் திரு. கவீந்தர் குப்தா உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குடியரசுத் துணைத் தலைவரின் உரையை மேலும் அறிந்து கொள்ள இணையதளம்:

http://www.pib.nic.in/

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1533807) வருகையாளர் எண்ணிக்கை : 102
இந்த வெளியீட்டை படிக்க: English