சுரங்கங்கள் அமைச்சகம்

நால்கோ லாபம் இரு மடங்கானது

Posted On: 29 MAY 2018 12:30PM by PIB Chennai

பாக்ஸைட் உற்பத்தியிலும் அலுமினா தயாரிப்பிலும் உலகத் தரத்தை எட்டியதை அடுத்து, தேசிய அலுமினியம்  கம்பெனி லிமிடெட் (NALCO) தனது பணி, லாபம் ஆகிய இரண்டிலும் சாதனையை நிரூபித்திருக்கிறது.

கடந்த மே 26ம் தேதி நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017-18ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை நால்கோ (NALCO) நிறுவனம் 100 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டில் மொத்தம் ரூ. 669 கோடி விற்றுமுதலை ஈட்டிய அந்நிறுவனம் இந்த ஆண்டு ரூ.1,342.19 கோடியை ஈட்டியிருக்கிறது. கடைசி மூன்று மாதத்தில் மட்டும் ரூ. 257.06 கோடி மொத்த லாபம் ஈட்டியிருக்கிறது.

நடப்பு ஆண்டில் நால்கோ பொதுத் துறை நிறுவனங்களில் அதிக அந்நியச் செலாவணி ஈட்டும் மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற இடத்தைப் பெற்றுள்ளது. மொத்த விற்றுமுதல் ரூ. 9,377 கோடியாகும். இது நிறுவனம் அமைக்கப்பட்டது முதல் பெற்ற அதிகபட்ச விற்றுமுதல் ஆகும். கடந்த ஆண்டை விட இது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி வருவாய் ரூ.4,076 கோடியாக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சியாகும்.

*****************


(Release ID: 1533756)
Read this release in: English