உள்துறை அமைச்சகம்
காஷ்மீர் எல்லை மக்களின் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகள் அமைப்பதை விரைவுபடுத்த உள்துறை அமைச்சர் உத்தரவு
Posted On:
28 MAY 2018 6:45PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று (மே 28) நடைபெற்றது. அதில், ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார். ரம்ஜானை ஒட்டி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அரசு அறிவித்த பிறகு கல்லெறி சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் தரப்பு 1,252 முறை போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டுக் எல்லைக் கோட்டுப் பகுதியிலும் பதுங்கு குழிகளை விரைவாக அமைக்கும்படி உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். கதுவா, சம்பா, ஜம்மு, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் 14 ஆயிரம் பதுங்கு குழிகளை அமைப்பதற்காக மொத்தம் ரூ. 415 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 1,431 இடங்களில் மக்கள் கூட்டாகப் பதுங்குவதற்காகவும் 13 ஆயிரம் தனி நபர் பதுங்கு குழிகளை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும்.
********************
(Release ID: 1533731)
Visitor Counter : 214