உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உணவுத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவன ஒப்புதல் பெற்ற பொருட்களைப் பரவலாக ஏற்கச்செய்ய உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம் சர்வதேச ஆய்வுக்கூடங்களுடன் இணைந்து செயல்படவுள்ளது

உணவுத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனத்தில் காப்பு மையத்தையும் உணவுச் சோதனைக்கூடத்தையும் மத்திய அமைச்சர் திருமதி ஹர்ஸிம்ரத் கவுர் பாதல் தொடங்கி வைக்கிறார்

Posted On: 25 MAY 2018 4:45PM by PIB Chennai

உணவுத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவன ஒப்புதல் பெற்ற பொருட்களை உலகளாவிய அளவில் பரவலாக ஏற்கச்செய்ய உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம் பல்வேறு உணவுப் பொருள்களைச் சோதனை செய்யும் பல்வகையிலான சர்வதேச ஆய்வுக்கூடங்களுடன் ஒத்துழைத்துச் செயல்படவுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று (25.05.2018) கூறினார். ஹரியானா, சோனிபாட்டில் உணவுத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனத்தில் காப்பு மையத்தையும் உணவுச் சோதனைக்கூடத்தையும் மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொடங்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

பின்னணி :

உணவுத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனமானது உணவுத் தொழில்நுட்பத்தின் மீது ஓர் ஒருங்கிணைந்த திட்டக் கவனக் குவிப்பைக் கொண்டுள்ள ஒரு தேசிய நிறுவனம் ஆகும். வாய்ப்புகளைக் கண்டறிந்து உணவுப்பதப்படுத்தும் துறைக்கு வர விரும்பும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தத் தொழிலின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் புதுமைக் கற்றல் சூழலை இது தருகிறது.

பெரிய மற்றும் சிறிய அளவிலான புதிய தலைமுறை தொழில்முனைவோர்களுக்குக் வணிகக் காப்பை இது அளிக்கிறது. அதுபோல தற்போது செயல்பட்டுவரும் தொழிலகங்கள் சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது. மாணவர்களுக்கும் தொழிலார்வலர்களுக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


(Release ID: 1533545) Visitor Counter : 130