குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமூக சேவை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதுடன் மக்களிடையே உறவை வலுப்படுத்தவும் உதவுகிறது: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 25 MAY 2018 1:09PM by PIB Chennai

சமூக சேவை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதுடன் மக்களிடையே உறவை வலுப்படுத்தவும் உதவுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர்
திரு. எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அரிமா சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு குறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு உரையாற்றிய அவர், இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டையும், ஆரோக்கியத்தையும் வலியுறுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார்.

சர்வதேச அரிமா சங்கங்கள் உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் தேவை உள்ளவர்களுக்கு உதவி புரிந்து வருவதாக குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். மனித நேய மாண்புகள் அறம், வள்ளல் தன்மை, சக மனிதர்கள் மற்றும் பிற உயிர்களிடம் கருணை ஆகிய நற்குணங்கள் வேறு எந்த காலத்தையும் விட தற்போதைக்கு மிகவும் தேவையானதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளன என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு தனிமனிதரும் சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து வாழ்க்கை நடத்துவதுடன் அவர் வாழ்ந்து வரும் சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். சிக்கல் மற்றும் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதைப் போல வேறு எதிலும் மகிழ்ச்சியோ, திருப்தியோ கிடைக்காது என அவர் கூறினார்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



(Release ID: 1533516) Visitor Counter : 131


Read this release in: English