விவசாயத்துறை அமைச்சகம்

மாதிரி வேளாண் உற்பத்தி, கால்நடை ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைகள் (மேம்பாடு மற்றும் வசதி சட்டம், 2018: மத்திய வேளாண் அமைச்சர் வெளியிட்டார்

Posted On: 22 MAY 2018 7:05PM by PIB Chennai

ஏற்றுமதியாளர்கள், வேளாண் தொழில்கள் உள்ளிட்ட மொத்தமாக கொள்முதல் செய்வோருடன் விவசாயிகளை ஒருங்கிணைத்து சந்தை மற்றும் விலை ஆபத்துக்களில் இருந்து விவசாயிகளை மீட்டு அவர்களுக்கு சிறந்த விலை கிடைக்கவும் வேளாண் தொழில்களுக்கு மூலப் பொருட்கள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்யவும் மாதிரி ஒப்பந்த வேளாண் சட்டம் உருவாக்கப்பட்டு மாநிலங்கள் அதனை பின்பற்றும் வகையில் சுற்றுக்கு விடப்படும் என மத்திய நிதியமைச்சர் தனது 2018-19 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஒப்பந்த வேளாண்மை மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை மேம்படுத்துவதில் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளுக்கு பெரும் பங்கு உள்ளது. விவசாயிகள் சார்பில் அவர்கள் ஸ்பான்சர் உடன் உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.

மாநில/யூனியன் பிரதேச வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்ப்ந்த வேளாண்மை மற்றும் சேவைகள் (மேம்பாடு மற்றும் வசதி) சட்டம் 2018 இறுதி மாதிரி சட்டம் சம்பந்தப்பட்ட ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் அவர்களால் வெளியிடப்பட்டது. கிராண்ட் தார்ண்டன் தயாரித்த விவசாய உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகம் குறித்த நூல் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.



(Release ID: 1533372) Visitor Counter : 213


Read this release in: English